LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF

சாதித்த தமிழர் –டாக்டர். சுரேஷ் சந்திரபாபு

பெயர் சுரேஷ் சந்திரபாபு.  சென்னை கொட்டுர்புரத்துக்காரர். இணையதளத்துக்குள் சென்று வறட்சித் தடுப்பு, உணவுப் பாதுகாப்பு, விவசாயப் பொருளாதாரம் என்று எந்த தலைப்பில் தேடினாலும், இந்த வேளாண் விஞ்ஞானியின் கட்டுரைகள்தான் மளமளவென்று கொட்டுகின்றன. பஞ்சத்தைத் தீர்த்தவர் என்ற வகையில், பல நாடுகளில் ஒரு ஹீரோவைப் போலவே ஆராதிக்கபடுகிற சுரேஷ்பாபு, வாஷிங்டனிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை அராய்ச்சி மையத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளராகவும், முதுநிலை பயிற்சி ஆலோசகராகவும், தற்போது பணியாற்றி வருகிறார்.

 

நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அரசாங்கங்களுக்கு உணவுப் பொருள் உற்பத்தியிலும் விவசாயத்திலும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவது அவரது வேலை.

 

வாழிங்க்டனில் வசித்தாலும் அவரது பேச்சில் இன்னமும் நமது வட்டார வழக்கு தப்பாமல் இருப்பது ஒரு இனிய ஆச்சர்யம்.

 

என் அப்பா அம்மாவுக்கு சொந்த ஊர் கண்சிபுரம்க. தமிழ் பற்றுள்ள குடும்பம். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். பியூசி படிச்சு முடிச்சவுடனே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படிக்க சீட்டு கிடைச்சதுங்க. விவசாயம் பத்தி நமக்கு ஒன்னும் தெரியாதுங்க. அந்த படிபிலயும் நமக்கு விருப்பம் இல்லைங்க.

 

“ராகிங் தொல்லையில் தப்பிக்கிரதுக்காக நுலகத்த்தில் நிறைய நேரம் செலவழிக்க ஆரம்பிச்சேன். அங்கதான் ஒரு சர்வதேச விவசாயப் பத்திரிகையில் “நார்மன் போர்லாக்” என்கிற விஞ்ஞானி பத்தின கட்டுரையைப் படித்தேன். அவர்தான் பசுமை புரட்சி மூலமா இந்தியாவை உணவுப்பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வைத்தவர். உணவுப் பொருள் மூலமாக உலகில் அமைதியை ஏற்படுதினதுக்காக  நோபல் பரிசு வாங்கினவர். போர்லாகோட வாழ்க்கை வரலாற்றைப் படித்த பின்னால்தான் அட விவசாயத்தை படிச்சுட்டு கூட சமுதாயத்திற்கு பயன்பட முடியும். சாதனை செய்ய முடியும்னு ஒரு உத்வேகம் வந்தது, என தான் விவசாயம் படித்த கதையை சுவாரஸ்யமாக விவரிக்கிறார் சுரேஷ் சந்திரபாபு.

 

பி.எஸ்.ஸி முடித்த கையேடு, வடக்கம்பாடி என்கிற கிராமத்தில், ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கிற ஒரு விவசாயக்குடும்பம் வளமாக வாழலாம் என்று அராய்ச்சி செய்து அவர் உருவாக்கின மாடல் அப்போதே சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது.

 

எம்.எஸ்.ஸி. யில் பள்ளி சத்துணவுத் திட்டத்தையும் சமுக பொருளாதாரத்தையும்  ஒப்பிட்டு அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்கு சர்வதேச அரங்கில் பயங்கர வரவேற்பு.  இன்றைக்கு அந்தக் கட்டுரையின் புள்ளி விவரங்களை நமது அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தி.

 

“என் ஆராய்ச்சியைப் பார்த்துவிட்டு அமெரிக்காவில் உள்ள நாலைந்து பல்கலைக்கழங்களில் இருந்து அழைப்பு வந்தது. பெல்லோஷிப், ஸ்காலர்ஷிப் கொடுத்து பி.ஹெச்.டி பண்ணச் சொன்னார்கள். நான் அயோவா பல்கலைகழத்தில் சத்துணவுப் பொருளாதாரம்கிற தலைப்பில் இந்தியாவை மாதிரியா வைத்து

பி.ஹெச்.டி செய்தேன். உலக அளவில் Economics of Nutrition என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட முதல் ஆராய்ச்சிக் கட்டுரை என்னுடையதுதான். அந்த ஆராய்ச்சிக்குப் பின்னால் சத்துணவுப் பொருளாதாரம்கிற ஒரு புதிய சப்ஜெக்ட் உலக அளவில் உருவாகிவிட்டது. என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார் சுரேஷ்பாபு.

 

அதே சப்ஜெக்டில் “கார்னெல்” பல்கலைக்கழகத்தில் முதுநிலை டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் போதுதான் அவரது ஆதர்ச ஹீரோ நார்மன் போர்லாக்கைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 

அவருடைய ஆலோசனைப்படி பஞ்சம் தீர்க்கும் நடவடிக்கைகளுக்காக தென்னாப்பிரிக்காவிற்கு ஓடியிருக்கிறார் சுரேஷ்பாபு. அப்போது ஆரம்பித்த பயணம்தான், இன்னும் அவரது ஓட்டம் ரிலே ரேசாக தொடர்ந்து கொண்டுள்ளது.

 

தென்னாப்பிரிக்க நாடுகள், வங்க தேசம், வியட்நாம், மத்திய ஆசிய நாடுகள் போன்ற இடங்களில் நிலவிய உணவுப் பற்றாக்குறையை சமாளித்தெல்லாம் ரொம்ப சவாலான அனுபவம் “ என்று மகிழ்ச்சியாக சொல்கிற சுரேஷ்பாபு, அமெரிக்க பார்லிமென்டில், ஆப்பிரிக்கா நாடுகளின் வறுமை தீர்ப்பது தொடர்பான விளக்குவுரை கொடுத்திருக்கிறார். வேறு எந்த இந்தியருக்கும் கிடைக்காத அங்கீகாரம் அது. இந்தியாவின் தேசிய திட்டக் கமிஷனுக்கும் ஆலோசனை வழங்கி வருகிற சுரேஷ் சந்திரபாபுவின் லட்சியம் என்ன தெரியுமா?

 

“பசுமைப் புரட்சி” முலமாக உணவுல நாம் தன்னிறைவு அடைந்திட்டோம். ஆனா இன்னும் 30 சதவீத மக்கள், சரியான் சாத்தான உணவு சாப்பிடாம இருக்காங்க இந்த தனி மனித உணவுப் பற்றாக்குறையை தீர்கிறமாதிரி”   இரண்டாவதா ஒரு புரட்சியை நம்ம நாட்டில் செய்யனும். நான் பிறந்த நாட்டுக்காக அதை நிச்சயமாக செய்வேன். என்கிறார் சுரேஷ்பாபு உணர்வுப்பூர்வமாக.

Suresh Babu

Senior Research Fellow

 

Division: 

Partnership, Impact and Capacity Strengthening Unit

 

Office: 

IFPRI-Washington, DC

 

Position: 

Senior Research Staff

 

Languages spoken: 

ChichiwaEnglishHindiMalayalamTamil,Telugu

Dr. Babu was educated at Agricultural Universities in Tamil Nadu, India (B.S. Agriculture; M.S. Agriculture) and at Iowa State University, Ames, Iowa (M.S. Economics and PhD Economics). Before joining IFPRI in 1992 as a Research Fellow, Dr. Babu was a Research Economist at Cornell University, Ithaca, New York. Between 1989 and 1994 he spent 5 years in Malawi, Southern Africa on various capacities. He was Senior Food Policy Advisor to the Malawi Ministry of Agriculture on developing a national level Food and Nutrition Information System; an Evaluation Economist for the UNICEF-Malawi working on designing food and nutrition intervention programs; Coordinator of UNICEF/IFPRI food security program in Malawi; and a Senior Lecturer at the Bunda College of Agriculture, Malawi developing and teaching computer-based policy-oriented post graduate courses.

by Swathi   on 10 Oct 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.