|
||||||||||
முருங்கை கீரை ஒரு அற்புதம் !! |
||||||||||
அமெரிக்காவில் உள்ள ட்ரீஸ் பார் லைப் என்ற அமைப்பு ஒரு பிரசுரத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் முருங்கையின் பயன்கள் பற்றி மிகவும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே கிராமப்புறங்களில் சொல்வார்கள், "முருங்கை திண்ணா, முன்னூறு வராது என்று. முருங்கை இலைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள். 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப் படுவார்கள் என்கிறது அந்த சொல்வழக்கு. இந்தப் பிரசுரமும் அதைதான் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கிறது. முருங்கை இலையில் : பாலாடையை விட இரண்டு மடங்கு புரோட்டீன் ஆரஞ்சை விட ஏழு மடங்கு வைட்டமின் சி வாழைப்பழத்தை விட மூன்று மடங்கு பொட்டாசியம் கேரட்டை விட நான்கு வைட்டமின் ஏ பாலைவிட நான்கு மடங்கு கால்சியம் உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் இந்த இலையில் இருப்பதாகப் பெரிய பட்டியல் தருகிறார்கள். ஊட்டச்சத்து குறைவால் ஏழைக் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவதாக அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கூட ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நமது அன்றாட உணவில் போதுமான ஊட்டச்சத்து இருப்பதில்லை. எனவே முருங்கை இலையை அடிக்கடி நமது சமையல் சேர்த்து வர வேண்டும். அந்த அளவுக்கு நேரம் இல்லாதாவர்கள் முருங்கை இலையைக் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப் பொடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும். இனி முருங்கைக் கீரையை தவறாமல் சாப்பிடுங்கள்.... ஆரோக்கியமாக வாழுங்கள்.... |
||||||||||
by Swathi on 28 May 2014 3 Comments | ||||||||||
Tags: முருங்கை இலை முருங்கை கீரை Drumstick Leaves Murungai Keerai | ||||||||||
Disclaimer: |
||||||||||
|
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|