LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

தம் ஆலூ (Dum Aloo)

தேவையானவை : 


உருளை கிழங்கு - 1/2 கிலோ

முழு தனியா - 2 டேபிள்ஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

மிளகாய் வத்தல் - 5

ஏலம் - 1

பட்டை - 2

கிராம்பு - 2

பிரியாணி இலை - 1

பூண்டு பல் - 10

எண்ணெய் - 1/4 கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

இஞ்சி துருவியது - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் -2 டீஸ்பூன்

உப்பு


செய்முறை:


1.முதலில் உருளை கிழங்கை முக்கால் பதம்  வேக வைத்து போர்க் வைத்து ஓட்டைகள் போட்டு வைக்கவும்.இஞ்சி,பூண்டு,மிளகு,தனியா,மிளகாய் வற்றல்,ஒரு பட்டை,ஒரு கிராம்பு எல்லாவற்றையும் வருக்காமல் மைய அரைத்து கொள்ளவும்.


2.உருளை கிழங்குடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து உருளை கிழங்கு உடையாமல்  பிரட்டி ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.அரைத்த விழுதை உருளை கிழங்கில் சேர்த்து பிரட்டி விடவும்.


3.வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி பட்டை,கிராம்பு ,ஏலம்  சேர்த்து வறுத்து பொடித்து கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளிச்சு இலை சேர்த்து உருளைகிழங்கை சேர்க்கவும்.


4.மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை மசாலாக்களை வேக விடவும்.உருளை கிழங்கு லேசாக வறுபட ஆரமித்ததும் கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.பொடித்த மசாலா பொடி,கொத்தமல்லி தூவி மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதித்ததும் பரிமாறவும்.

Dum Aloo

Ingredients for Dum Aloo :


Potato - 1/2 Kg,

Coriander - 2 Tbsp,

Pepper - 1/2 Tsp,

Dry Chilies - 5,

Cardamom - 1,

Cinnamon - 2,

Cloves - 2,

Bay Leaves - 1,

Garlic - 2 Cloves,

Oil - 1/4 Cup,

Cumin - 1 Tsp,

Shreded Ginger - 1 tsp,

Sugar - Little,

Turmeric Powder - 1 Tsp,

Chilli Powder - 2 Tsp,

Salt - as needed.


Method to make Dum Aloo : 


1. First boil the potatoes. It should not be fully cooked. Then hole the potatoes by using fork. Keep this aside. Then grind ginger, garlic, coriander, dry chilies, cloves, cinnamon. Do not fry these ingredients. Grind it well. 

2.Then add turmeric powder, chilli powder, salt along with cooked potatoes. Stir it without breaking potatoes. Keep this aside for 5 minutes. Then apply the grinded masala paste on potatoes. 

3. Heat the frying pan then add cloves, cinnamon, cardamom and grind it powdery. 

4. Heat oil in a frying pan then add cumin, bay leaf and season it then add the mixture of potatoes. 

5. In a low flame boil the potato masala mixture and it does not stick in bottom. Add some water and allow it to boil well. Then add masala powder and coriander leaves along with them. Allow it to boil for 3 minutes. 


Dum Aloo is ready to serve.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.