தெருவில் வழிப்பறியில் ஈடுபடும் திருடர்களைப் பற்றி நாம் கேட்டிருப்போம் சிலர் பார்த்திருப்போம். ஆனால் இணையதளத்தில் இருக்கும் பேராசை மனிதர்களை ஏமாற்ற பல நூதனமான முறையில் திருடர்கள் உலா வருகிறார்கள். அந்த வகையில் இன்று காலை ValaiTamil.Com வாசகர் ஒருவருக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இங்கே தருகிறோம். பல வாசகர்கள் பணச்சிக்களில் உள்ளவர்கள் அல்லது விபரம் இல்லாதவர்கள் இப்படிப்பட்ட மின்னன்களைப் பார்த்து ஏமாந்துபோய் இதற்கு பதில் போட்டுவிடுகிறார்கள். அப்படி நீங்கள் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பினால் நீங்கள் ஒரு மோசடிக் குழுவிடம் நன்றாக மாட்டிக்கொண்டீர்கள் என்று அர்த்தம். இதை நம் இணையதள வல்லுனர்களுக்கு அனுப்பி ஆராயச் சொல்லி இப்படிப்பட்ட இணையத் திருட்டில் இருந்து ஒருவர் எப்படி தன்னை பாதுகாப்பது என்பது குறித்து கேட்டோம்: அவர்கள் கொடுத்த தகவல்களை கவனமாகப் படித்து நண்பர்களுக்குப் பகிரவும்..
மின்னஞ்சல்:
==================================================================
----- Original Message -----
From: <uk@office790.onmicrosoft.com>
To: "Recipients" <uk@office790.onmicrosoft.com>
Sent: Wednesday, October 30, 2013 7:02 AM
Subject: URGENT NOTIFICATION-RBI
Reserve Bank of India {RBI} India's Central Bank Reserve Bank of India regional office, Delhi, Foreign Remittance Department. New Delhi: 110 001, India, SCAMMED VICTIM/ 2,73,36,500 INR . REF/PAYMENTS NO: ECB/06654 2,73,36,500 INR.
Dear E-mail Owner,
On behalf of the (RBI),India Government and United Nations, we wish to notify you that Your E-mail ID were listed and approved for this payment of 2 Crore, 73Lakhs, 36 Thousand, 500 Rupees (2, 73, 36,500 INR).Being for a compensation funds donated by the India Government and United Nations for all scammed victims via email selections. This is to bring to your notice that we are delegated from the India Government and United Nations in conjuction with the World Bank to pay 10 victims of scam 2 Crore,73Lakhs, 36 Thousand, 500 Rupees(2,73,36,500 INR) .
Your E-mail ID were listed and approved for this payment as one of the selected email by the Google Admin Extractor as a benefactors for the compensation of 2 Crore,73Lakhs, 36 Thousand, 500 Rupees(2,73,36,500 INR) .
According to the last meeting held here in the RBI, it was brought to our notice of the various type of scams that is going on in our world today and in India, and this scammer's is even using the name of the (RBI) to scam people. Today many people have lost their property and many have gone in bankruptcy.
YOU ARE ADVISED TO FILL THE FORM BELOW FOR THE RELEASE OF YOUR COMPENSATION FUND IMMEDIATELY.
1. FULL NAMES 2. CONTACT ADDRESS 3. MOBILE NUMBERS 4. AGE 5. MARITAL STATUS 6. ID PROOF You are to send your information immediately for the processing and transfer of your compensation fund. NOTE: You are to immediately provide with the RBI the above information’s for us facilitate the release of your compensation fund to you immediately. Also you are not to duplicate or communicate with any one about this because we are still In trace of this internet hoodlums and criminals. Yours truly Mrs Neena Rao For: Foreign Remittance Department Online Banking Unit RBI © RBI. All Rights Reserved.
======================================================================
இதை போலி ஆசாமிகளின் கைவரிசை என்பதை எப்படி அறிவது?
- உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும், நீங்கள் எதிர்பார்க்காத நண்பர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல் அனைத்தும் மோசடி மின்னஞ்சல் என்பதை அறியவும்.
- இந்த உலகில் எந்த வித லாட்டரி , அதிர்ஷ்ட சீட்டும் உங்கள் பெயரையோ, உங்கள் மின்னஞ்சலையோ வைத்து உங்களுக்குத் தெரியாமல் நடத்தப்படுவதில்லை. மக்களிடம் உள்ள பேராசை மற்றும் சஞ்சலப்படும் மனநிலையில் உள்ள நபர்களை குறிவைத்தே இப்படிப்பட்ட மோசடிக் கும்பல் பிழைப்பு நடத்துகிறது.
- மின்னஞ்சல் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மோசடி மின்னஞ்சல்கள் வருகிறது. இதை உடனே DELETE செய்வது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. மறந்தும் REPLY செய்துவிடாதீர்கள்.
- முதலில் இது யாரிடம் இருந்து வந்திருக்கிறது என்பதை பார்க்கவும். uk@office790.onmicrosoft.com இப்படிப்பட்ட மின்னஞ்சல்கள் மக்களுக்கு தெரிந்த பெரிய நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளை குறிப்பிட்டே வருகிறது. இங்கே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வருவதுபோல் ON என்ற வார்த்தைய MICROSOFT என்ற வார்த்தையில் சேர்த்து ONMICROSOFT.COM என்ற இணையதளத்தை பதிவு செய்துள்ளார்கள். Rs.500/- கொடுத்தால் எந்த பெயரிலும் (Domain Name/Website Name) ஐந்து நிமிடத்தில் பெறமுடியும். அதுதான் செய்துள்ளார்கள்.
- yahoo, gmail, hotmail போன்ற இலவச மின்னஞ்சல்களைத் தவிர்த்து மற்ற பெயர்களில் வரும் மின்னஞ்சல்கள் இதுபோல் ஒரு WEBSITE NAME பதிவு செய்யாமல் அனுப்பமுடியாது. எனவே,நமக்கு வந்துள்ள மின்னஞ்சலை எப்படி சரியாக புரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
uk@office790.onmicrosoft.com
- ஒவ்வொரு மின்னஞ்சலும் @ என்ற குறியீடு இருக்க வேண்டும். அதற்கு முன்ப உள்ளது மின்னஞ்சல் அனுப்புனரின் பெயர். இங்கே UK என்று உள்ளது.
- அடுத்து DOT (.) என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கவேண்டும். அது ஒன்றுக்கு மேல் இருந்தால், அதில் கடைசி டாட் எங்கே இருக்கிறது என்று பார்க்கவும் . அதற்கு அடுத்து வருவது .com/ .org /.net/.biz/.in/.co.in என்று பல பெயர்களில் இருக்கும். சில நேரங்களில் .co.in என்று வரும்போது அது இந்தியாவை குறிக்கும். நமக்கு வந்துள்ள மின்னஞ்சலில் .COM என்று இருக்கிறது.
- அடுத்து .கடைசியாக வரும் DOT(. ) க்கு முன் மற்றும் இன்னொரு DOT அல்லது @ இதற்கு நடுவில் உள்ள வார்த்தையை எடுக்கவும். இங்கே ONMICROSOFT என்று இருக்கிறது.
- இங்கே ONMICROSOFT.COM என்பதே இந்த மோசடிக் கும்பல் பதிவு செய்துள்ள இணையதளத்தின் பெயர். எனவே இதை உறுதி செய்ய கூகுளில் WHOIS என்று டைப் செய்தால் கீழ்கண்டவாறு வருகிறது.
WHOIS information for onmicrosoft.com:***
[Querying whois.verisign-grs.com]
[whois.verisign-grs.com]
Whois Server Version 2.0
Domain names in the .com and .net domains can now be registered
with many different competing registrars. Go to http://www.internic.net
for detailed information.
Domain Name: ONMICROSOFT.COM
Registrar: MARKMONITOR INC.
Whois Server: whois.markmonitor.com
Referral URL: http://www.markmonitor.com
Name Server: NS1.BDM.MICROSOFTONLINE.COM
Name Server: NS2.BDM.MICROSOFTONLINE.COM
Status: clientDeleteProhibited
Status: clientTransferProhibited
Status: clientUpdateProhibited
Updated Date: 02-jan-2013
Creation Date: 03-feb-2005
Expiration Date: 03-feb-2014
- பிறகு www.ONMICROSOFT.COM என்று இணையத்தில் தேடினால் அப்படி ஒரு இணையதளம் இல்லை என்று வரும் . அதாவது www.ONMICROSOFT.COM என்ற பெயரை மட்டும் பதிவு செய்து, மின்னஞ்சலுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது விளங்கும்.
“Sorry, the website onmicrosfot.com cannot be found”
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது ஏதாவது Name Server இருக்கிறதா என்பதாகும். இங்கே. Name Server: NS1.BDM.MICROSOFTONLINE.COM என்று கொடுத்துள்ளார்கள். அதாவது, இந்த மோசடி பேர்வழிகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயரை அவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் www.MicrosoftOnline.com என்று கொடுத்தல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உண்மையான இணையதளம் வரும்.
- மக்களை நம்பவைக்க பல பெரிய அமைப்புகள் , அரசுத் துறைகள் போன்றவற்றின் பெயரை பயன்படுத்துவார்கள். இங்கே “On behalf of the (RBI),India Government and United Nations” என்பதை வைத்து நமக்கும் இந்த அமைப்புகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை சிந்திக்கவேண்டும். இப்படி வரும் மின்னஞ்சல்களை அந்த பெரிய நிறுவனங்களுக்கு அனுப்பினால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க உதவும்.
- உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை நூரு, ஆயிரம் என்று இல்லாமல் லட்சங்களில் , கோடிகளில் தான் இருக்கும். இதுவும் கவனிக்க வேண்டியது. இந்த உலகில் எதுவும் இலவசம் கிடையாது. இலவசமாக ஏதாவது வருமானால் அது உங்களை சிக்கலில் மாட்டும் பிரச்சினையுடன் சேர்ந்தே வரும். இலவசமாக தேர்தலில் கொடுக்கும் பணத்திற்கு ஒட்டு வாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதுபோல், எல்லா இலவசமும ஒரு எதிர்பார்ப்பை சுமந்தே வருகிறது. இங்கே உங்களிடம் உள்ள பணத்தை பிடுங்கும் திட்டத்துடன் செயல்படுகிறார்கள்.
- ஒருவேளை நீங்கள் இப்படிப்பட்ட மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பினால் உடனே அடுத்து உங்கள் விபரங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிப்பார்கள். பிறகு உங்கள் பணத்தை அனுப்ப இன்று மதியம் ஒரு மணிக்குள் 50000 ரூபாயை குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் போடச் சொல்வார்கள். அவ்வளவுதான் இவரை மடக்கி எவ்வளவு வாங்கமுடியுமோ அவ்வளவு வாங்கிக்கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டுவார்கள். இப்படிபட்ட மோசடிகள் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியாக வந்துள்ளது. ஆனால் மக்கள் ஒவ்வொருநாளும் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
- இன்னும் சில கும்பல், இணையதளங்களில் வேலைக்காக பதிவுசெய்யும் BIO-DATA- க்களை சேகரித்து அதில் உள்ள உங்கள் விபரங்களை, வீட்டு முகவரியை , நீங்கள் வேலை செய்த , வேலைசெய்துகொண்டுள்ள நிருவனத்தை சரியாக சொல்லி, நீங்கள் குறிப்பிட்டுள்ள நிறுவனத்தில் அந்த தேதிகளில் வேலை செய்யவில்லை என்று தெரியவருகிறது என்றோ, சரியான தேதியை குறிப்பிடாமல் ஏமாற்றி உள்ளீர்கள், நீங்கள் தற்போது வேலைசெய்யும் நிறுவனம் உங்கள் பின்புலத்தை ஆராய (Background Check) எங்கள் நிறுவனத்தை அணுகியுள்ளது. இன்று மாலை 6 மணிக்குள் நாங்கள் எங்கள் அறிக்கையை அனுப்பப்போகிறோம் எனவே இதை மாற்றி அனுப்ப என்னால் முடியும். அதற்கு உடனே ரூபாய் 50000/- குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் என்றோ உங்கள் கைபேசிக்கு அல்லது மின்னஞ்சலுக்கு வரலாம். இப்படிப்பட்ட எந்த வகையான மோசடியாக இருந்தாலும் அதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இப்படிப்பட்ட தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்வதும் அதை நம் நண்பர்களுக்கு தெரிவிப்பதும்தான்.
உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்துகொள்ளவும்.
|