|
||||||||
ஈஸி சாம்பார் ரைஸ்(Easy Sambar Rice) |
||||||||
தேவையானவை : பச்சரிசி – 2 கப் துவரம் பருப்பு – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 கருவேப்பில்லை – 4 இலை குடைமிளகாய் – 1 காரட் – 100 கிராம் முள்ளங்கி – 100 கிராம் நெய் – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ் ஸ்பூன் சாம்பார் பொடி – 2 டீஸ் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு புளி – சிறிய நெல்லிக்காய் அளவு கடுகு – 1/2 டீஸ் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 செய்முறை : 1.முதலில் புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும் .பின்பு வெங்காயம் , தக்காளி,காய்களை ஓரே அளவாக வெட்டி கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.பின் அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.அதன் பின் ஒரே அளவில் வெட்டி வைத்துள்ள காய்களை போட்டு வதக்கவும். 2.அரிசி , துவரம் பருப்பு,கரைத்து வைத்துள்ள புளி,தக்காளி , சாம்பார் பொடி ,உப்பு மற்றும் 4 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறி 2 விசில் வரும்வரை வேகவிடவும்.பிறகு குக்கரின் பிரஸர் அடங்கியதும் நெய் சேர்த்து சுடாக பரிமாறவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|