|
||||||||
ஈசி இனிப்பு பொங்கல்(Easy Sweet Rice) |
||||||||
தேவையானவை : பச்சரிசி -- 1 கப் வெல்லம் -- 1 1/2 கப் பாசிபருப்பு -- 1/2 கப் ஏலக்காய் -- 4 என்னம் உலர்ந்த திராட்சை -- 10 என்னம் முந்திரி பருப்பு -- 10 என்னம் நெய் -- 1/4 கப் செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பை கழுவி 1 கப்புக்கு 2 1/2 கப் வீதம் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் 12 நிமிடம் சிம்மில் வைக்கவும்.பின் வெல்லத்தை தட்டி எடுக்கவும்.பின் அரிசி வெந்த பின் தட்டிய வெல்லத்தை போட்டு கிளறவும்.இது அந்த சாதத்தின் சூட்டிலேயே இளகிவிடும். 2.தாளிக்கும் கரண்டியில் 1 ஸ்பூன் நெய்யை சற்று சூடு படுத்தி ஏலக்காயை நசுக்கி சேர்த்து அதனுடன் உலர்ந்த திராட்சை சேர்த்து வதக்கி பொரிந்ததும் பொங்கலில் நெய்யுடன் கொட்டவும்.பின் மற்றுமொறு 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை போட்டு சிவக்க வறுத்து நெய்யுடன் பொங்கலில் கொட்டவும்.பின் நன்றாக மீதியுள்ள நெய்யை விட்டு பொங்கலை கிளறி அடுப்பை சிம்மில் வைத்து கிளறி வெல்லத்தின் வாசம் போனதும் இறக்கி பரிமாறலாம். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|