|
||||||||
எக் ஃப்ரைட் ரைஸ் (EGG FRIED RICE) |
||||||||
தேவையானவை: பாசுமதி அரிசி : 1 கப் முட்டை கோஸ் : 1/4 கிலோ கேரட் : 1 வெங்காயத் தாள்: 5 கொடைமிளகாய் : 1 வெங்காயம்: 1 சிறியது பீன்ஸ் : 10 மிளகு தூள்: சிறிதளவு சோயா சாஸ் : 2 டீஸ்பூன் அஜினமோட்டோ: 1 1/2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணை 1/4 கப் முட்டை : 2 செய்முறை: 1.முதலில் பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு டீஸ்பூன் எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேகவிடவும். 2.முட்டையில் 2 டீஸ்பூன் எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும். 3.ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தாள், குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். 4.பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் ஆறிய சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும். 5.கடைசியாக பொரித்த முட்டையை போட்டு கிளறிபரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|