|
||||||||||||||||||
முட்டை கடலை குழம்பு(Egg Ground nut sauce) |
||||||||||||||||||
தேவையானவை : முட்டை - 4 (வேக வைத்தது) கொண்டைக்கடலை - 100 கிராம் (வேக வைத்தது ) வெங்காயம் - ஒன்று (நறுக்கியது) புளிக்கரைசல் - ஒரு கப் உப்பு - தேவைக்கேற்ப கடுகு, சோம்பு - தாளிக்க எண்ணெய் - 2 டீஸ்பூன் தக்காளி - ஒன்று (நறுக்கியது) மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் செய்முறை : 1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும். பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.பின்பு வதங்கிய கலவையில் மிளகாய் தூள், தண்ணீர் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி உடனே வெந்த கொண்டைக்கடலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 2.வேக வைத்த முட்டையை கத்தியால் நன்றாக கீறி விடவும். பிறகு அந்த முட்டைகளை கொதிக்கும் புளிக்கரைசலில் போடவும்.முட்டை குழம்புடன் நன்றாக கொதித்து வரும். பிறகு குழம்பு பதத்திற்கு வந்த உடன் சூடாக பரிமாறவும். |
||||||||||||||||||
Egg Ground Nut Sauce | ||||||||||||||||||
Ingredients for Egg Ground Nut Sauce:
Egg-4 (Boiled) Bengal Gram-100 G (Boiled) Onion-1 (Chopped) Tamarind-1 Cup Salt-as Needed Mustard, Fennel-for Seasoning Oil-2 Tsp Tomato-1 (Chopped) Chilly Powder- 2 Tsp Ginger Garlic Paste-1 Tsp
Procedure to make Egg Ground Nut Sauce:
1. Heat oil in a pan, add mustard, fennel and let to splutter. Then add ginger, garlic paste, onion, tomato, salt and saute well. Then add chilly powder, water and pour tamarind juice and then add boiled bengal gram and allow to boil. 2. Peel the boiled eggs. Then put the eggs in boiling tamarind mixure. Now eggs boiled with sauce. When comes thick consistency, remove from flame and serve it.
|
||||||||||||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|