LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிப்பு !! மே 16 ல் வாக்கு எண்ணிக்கை !!

நாடாளமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. 


தற்போதைய மத்திய அரசின் ஆட்சிகாலம் வரும் ஜூன் முதல் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மே 31ம் தேதிக்குள் 16வது லோக்சபாவிற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 16வது லோக்சபாவிற்காக நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் தேதி விபரத்தை இன்று தலைமை தேர்தல் கமிஷ்னர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது,


தற்போது லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. 


முதன் முறையாக 18 மற்றும் 19 வயது நிரம்பிய 2.4 கோடி புதிய வாக்காளர்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 


இந்த தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.


லோக்சபா தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக நோட்டோ முறை லோக்சபா தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டும் வழங்கப்பட உள்ளது. 


லோக்சபா தேர்தலுக்காக 9 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 


தேர்தல் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட ஓட்டுச்சீட்டுக்கள் வழங்கப்படும். 


ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தவிர்க்க புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.  


தேர்தல் தேதிகள் :


முதல் கட்டமாக ஏப்ரல் 7ஆம் தேதி அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். 


3ஆம் கட்டமாக ஏப்ரல் 10ஆம் தேதி அந்தமான் நிகோபார், பீகார், சண்டிகார், சத்தீஸ்கர், அரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லட்சத்தீவுகள், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய 14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும்.


4ஆம் கட்டமாக தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி அஸ்ஸாம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும், 5ஆம் கட்டமாக ஏப்ரல் 15ஆம் தேதி பீகார், சத்தீஸ்கர், கோவா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.


தமி்ழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ஆம் தேதியும் நடைபெறும், அன்றைய தினமே, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும்.


வாக்கு எண்ணிக்கை மே 16ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.  

by Swathi   on 05 Mar 2014  0 Comments
Tags: Lok Sabha   Lok Sabha Election 2014   Nadalumandram Therthal   லோக் சபா   லோக் சபா தேர்தல்   தமிழக லோக் சபா தேர்தல்     
 தொடர்புடையவை-Related Articles
லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிப்பு !! மே 16 ல் வாக்கு எண்ணிக்கை !! லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிப்பு !! மே 16 ல் வாக்கு எண்ணிக்கை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.