LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பதினோராம் திருமுறை-36

12.5. ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்



1317    பாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை அன்னம் நடப்ப அணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.     1

1318     
கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி
பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே.     2

1319     
குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிரஅன்று
துவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே.     3

1320     
கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கடம் ஆக்கிஅ.தே
வெள்ளம் பணிநெய்தல் ஆக்கிய வித்தகன் வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயல்உகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.     4

1321     
ஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன் மென்கிளிமாந்
தேறல்கோ தித்தூறு சண்பகம் தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.     5

1322     
அந்தமுந் தும்பிற வித்துயர் தீர அரனடிக்கே
பந்தமுந் தும்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.     6

1323     
புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புகஅடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனிஉம்பர் பம்பிமின்னும்
கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடும் கொக்குறங்கும்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே.     7

1324     
எண்டலைக் குந்தலை வன்கழல் சூடிஎன் உள்ளம்வெள்ளம்
கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியில் ஓடும் விரவி மிளர்பவளம்
தண்டலைக் கும்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே.     8

1325     
ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும்
பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே.     9

1326     
விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி ஒல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.     10

1327     
பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து
ஆலிப்ப ஆறதே றுங்கழ னிச் சண்பை அந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத் தெண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே.     11


திருச்சிற்றம்பலம்

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.