|
||||||||||||||||||
என் டைகருக்கும் சில வைக்கணும் |
||||||||||||||||||
![]() சுவிச்சர்லாந்து நாட்டில் ஒரு ரயில் நிலையத்தில் நாய்க்குச் சிலை வைத்திருக்கிராங்கனு செய்தி தெரிந்த பிறகு என்னோட டைகரைப் பத்தி நினைக்காம என்னால் இருக்க முடிய வில்லை.
டைகரை எப்போதெல்லாம் நான் நினைக்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு அழுகைய வரும்.
அப்போ எனக்குப் பத்து வயது இருக்கும். நானும் என்னோட நண்பர்களும் பேசி கொண்டிருக்கும் போது . "டேய் இன்னைக்கு என்னடா பண்ணலாம்? " "மரமேறி விளையாடலாமா? " முத்துமணி கேட்டான்.
"வேண்டாம் கிரிக்கெட் விளையாடாலாமா என்று " இப்ராஹிம் சொன்னான்.
"எத்தனை நாள்தாண்டா கிரிக்கெட் விளையாடுவது. கிரிக்கெட்டுக்கு லீவு விட்டு விடுவோம். இப்ப நல்ல வெயிலா இருக்கு. நம்ம குலத்தில் தண்ணியும் நிறைந்திருக்கு. குளிக்கப் போலாமாணு" நான் கேட்டேன்.
"குலக்கரையில் வேப்பமரமும் இருக்கு. மரத்தில் ஏறலாம் ,தண்ணிலையும் குதிக்கலாம்" என்று முத்துமணி சொன்னான்.
ஆகா நல்ல யோசனை... எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. நாங்க குளத்தைப் பார்த்து நடக்கத் தொடங்கினோம்.
அப்ப டைகரு எல்லாத்துக்கு முன்னாலே வழிகாட்டி போல் நடந்தது.
துணிமணியெல்லாம் கழட்டி வச்சிட்டு வேப்பமரத்தில் தாவிப்பிடித்து ஏறினோம் தொப்புண்ணு தண்ணில் குதிசததோம். தண்ணீர் எல்லாப் பக்கம் சிதறியது.
அப்படியே தணிக்குள்ளே போயிருவோம். மூச்சுப் புடுச்சிட்டு வெளியே வருவோம். படிக்கட்டு வழியா ஏறிப்போயி மறுபடியும் மரத்திலே ஏறி... தொப்புண்ணு குதிப்போம். கொஞ்ச நேரம் தண்ணில் மல்லாந்து படுப்போம். மறுபடியும் படிக்கட்டில் ஏறிப்போயி வேப்பமரத்திலேறி... எத்தன நேரம்தான் இப்படி விளையாடினோம்ணு தெரியாது. டைகர் மரத்தடில் படுத்துகிட்டு எங்களை வேடிக்கை பார்த்திட்டிருந்திச்சு.
குளிச்சுக் குளிச்சு எங்க கண்ணெல்லாம் சிவந்து போச்சு. டேய் போதும்டா.. பசி வயித்தைக் கிள்ளுது. வாங்கடா போலாம். அம்மா வேற சாப்பாட்டை வச்சிட்டுக்கு காத்திட்டிருக்கும்.e என்று இப்ராஹிம் சொன்னான்.
உடம்பெல்லாம் ஒரே அசதியா இருந்தது. எல்லாரும் படிக்கட்டு வழியா ஏறி கரைக்கு வந்தோம். துணிமணிகளை மாட்டிக்கிட்டு வீட்டுக்குப் புறப்பட்ட தயாரானோம். அப்போ சட்ணு டைகர் ஓடி வந்து குறுக்கே நின்று கொண்டது.
நான் கால் எடுத்து வைத்தால் என்ன பாத்துக் குறைக்குது. ஏய் டைகர் வீட்டுக்குப் போகலாம் வா.. அப்டீண்ணா அது வரமாட்டேங்குது. அதோட காதைப்புடிச்சு இழுத்தாலும் நின்ற இடத்திலிருந்து அசைய மாட்டேங்குது.
"''டேய் என்னடாச்சு உன் நாய்க்கு'' அப்படீண்ணு நண்பர்கள் எல்லாம். டைகரை ஒரு மாதிரியாப் பாக்க ஆரம்பிச்சாங்க.
எனக்கும் ஒரு மாதிரியாயிருந்தது. நீ வரலேண்ணா போ நா போறேணு சொல்லிட்டு நாலு எட்டு வைத்தேன். டைகரு ஓடி வந்து என் டிரவுசரக் கடிச்சு இழுத்தது. அப்படி இழுத்ததில் என் டிரவுசரு கிழிஞ்சும் போச்சு. குளிக்கக் கொண்டு வந்து துண்டை எடுத்துக் கட்டிக்கிட்டேன்.
'''டேய், உன் டைகருக்கு வெறிபுடிச்சிருச்சிடா அப்படீண்ணு சொல்கிட்டே பக்கத்தில் கிடந்த ஒரு கல்லெடுத்து குறி பார்த்து எறிந்தான் முத்துமணி. அந்தக் கல்லு சரியா டைகரோடு நெத்தில் பட்டது. ரத்தம் கொட்டுது.
என்னடா இப்படி பண்ணீட்ட... அப்படீண்ணு நான் அவங்கிட்ட சண்டைக்குப் போய்ட்டேன்.
டைகர் முத்துமணியை பார்த்து "பெள பெள" ண்னு குறச்சுகிட்டு பாஞ்சு வந்தது. அவன் பயந்து ஒரே ஓட்டமா ஓடிட்டான்.
அதபார்த்தப்போது முத்துமணி சொன்னது சரியோ என்று எனக்கும் தோணியது.
அது பேசாம அந்த வேப்பமரத்தடியிலே போய் படுத்துகிட்டது. நானும் வருத்தத்தோட வீட்டுக்குப்போனேன். அம்மா எனக்குச் சாப்பாடு போட்டாங்க எனக்கு சாப்பிடறதுக்கே மனசில்ல. இருந்தாலும் அம்மா திட்டுவார்களேஎன்று நினைத்து சாப்பிட உக்கார்ந்தேன்.
டேய் உங்க கழுத்தில் கிடந்த தங்கச் சங்கலி எங்கடாண்ணு அம்மா கேட்டாங்க.
அப்பத்தான் குளிக்குப்போகும்போது செயினைக் கழட்டி மரத்தோடு ஒரு கொம்பில் மாட்டினது ஞாபகத்துக்கு வந்தது.
சாப்பிட உக்கார்ந்தவன் சாப்பிடாம அப்படியே எந்திருச்சு ஒரே ஓட்டமா குலத்துக்குப் போனேன். அங்க அந்த வேப்பமரத்தடியில் என் தங்கச் சங்கிலிக்கு காவலா டைகரு படுத்திருகந்தது.
நான் போய் அந்தச் செயினை எடுத்து கழித்தில் போட்டதும். அது போசாம வீட்டைப் பார்த்து நடக்கத் தொடங்கிச்சு.
எனக்கு அழுகை அழுகையா வந்தது. வீட்டுக்கு வந்ததும் அதோடு நெத்தியை தொடச்சுவிட்டு மருந்து வைத்து கட்டுப்போட்டேன். கொஞ்ச நாளில் காயம் குணமாயிருச்சு. பழையபடி நாங்க விளையாடத் தொடங்கீட்டோம்.
அப்படி இருக்கும்போது நாங்க வீடு மாறினோம். இப்போ சாலை ஓரமாக இருக்குது எங்க வீடு. எங்க வீட்டுக்குப் பக்கத்தில் வாடைக சைக்கிள் கடை ஒண்ணு இருக்குது. ஆகா சைக்கிள் பழகலாம்ணு சின்னச் சைக்கிள் எடுத்து எடக்கால் போட்டு ரோட்டில் ஓட்டிப் பழகினேன். டைகரும் கூட வரும். அது முன்னாலே போகும் நான் அதுக்குப் பின்னாலே போவேன்.
எடக்கால் போட்டது போதும் எல்லாரும் ஓட்டற மாதிரி நாமளும் ஓட்டலாம்ணு காலே எடுத்து மேலே போட்டு சைக்கிள் ஓட்டினேன். சைக்கிள் இப்படியும் அப்படியும் ஆடிச்சு. நான் தடுமாறி கீழே விழப்போறேன்.
எனக்குப் பின்னால் ஒரு காரு வேகமா வந்து கொண்டிருந்தது . நான் கீழே விழந்திட்டேன். காரோட டிரைவரு ப்ரேக் போட்டாரு. ஆனா காரு நிக்காமல் வந்து கொண்டிருந்தது. அப்ப என் டைகரு ஓடி வந்த்து. எனக்கும் காருக்கும் நடவுல் புகுந்தது. காரோடு சக்கரம் என் கண் முன்னாலே டைகரோட உடம்பு மேலே ஏறியது. டைகரு அந்தஇடத்தில் துடிதுடித்து இறந்தது. அன்றைக்கு என் டைகரு காருக்கு முன்னால் குதிக்காம இருந்திருந்தா இன்னைக்கு இந்தக் கதை சொல்ல நான் இருந்திருக்க மாட்டேன். |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|