LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க : 1 - பகுதி 2 குறளோடு உறவாடு– அஷ்ராஃப் குன்ஹூனு - பிற மொழிகளில் திருக்குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க குறளோடு உறவாடு

திருக்குறளும், சமய நூல்களும்:

    திருக்குறளை சமய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். திருக்குறளுக்கும் திருக்குரானுக்கும் இடையே அதிக வேறுபாடுகள் உள்ளன. பகவத்கீதைக்கும் திருக்குறளுக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன என்று திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறினார்.

    திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்கி அவற்றைத் திருக்குறளின் மூலத்தோடு ஒப்பிட்டு, எந்த மொழிபெயர்ப்பு திருக்குறளோடு பொருந்தி வருகிறது என்று ஆராய்ந்தார். ஏறத்தாழ 25 ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் திருக்குறளோடு ஆராய்ந்துள்ளார். எல்லா மொழிபெயர்ப்புகளும் சிற்சில குறைபாடுகள் உடையனவாக உள்ளன என்று திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறுகிறார்.

திருக்குறளின் நான்கு பிரிவுகள்:

    திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் சேர்த்து மொத்தம் 108 அதிகாரங்கள் உள்ளன. அவற்றைத் திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் நான்கு பிரிவுகளாகப் பகுத்துள்ளார்.

1. ஆன்மீகம்

2. நடத்தை

3. ஆளுகை

4. சமூகம்

ஆகியவையே ஆகும்.

பள்ளிப்பருவமும், திருக்குறளும்:

    பதின்ம வயதுக் குழந்தைகளுக்கு நடத்தை குறித்த குறட்பாக்களைக் கற்றுக் கொடுக்கலாம். நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சமூகம் குறித்த குறட்பாக்களை கற்றுக் கொடுக்கலாம். உலகியல் நோக்கில் உள்ள குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஒன்றாம் வகுப்பிலிருந்தே குழந்தைகளுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுக்கலாம். பொருள் புரியவில்லை என்றாலும் கூட நாளடைவில் புரிந்து கொள்வார்கள். ஆனால் சிறு வயதிலேயே திருக்குறள் குழந்தைகளின் மனதில் விதைக்கப்பட வேண்டும் என்று திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறுகிறார்.

திருக்குறளும் வாழ்வியலும்:

    எல்லா சமய நூல்களும் நல்லொழுக்கத்தையே கற்றுக் கொடுக்கின்றன. திருக்குறளைக் கற்றவர் நிச்சயம் நல்லொழுக்கத்துடன் வாழ்வார் என்றில்லை. ஆனால் திருக்குறளைக் கற்றவர்களில் 75 சதவீதம் பேர் திருக்குறளால் வழிநடத்தப்படுகின்றனர் என்பதில் ஐயமில்லை. திருக்குறள் நிச்சயமாக மனிதனை நல்ல குடிமகனாக மாற்றும். எனவே இளமையிலேயே குழந்தைகளுக்குத் திருக்குறள் கட்டாயமாக கற்றுத் தரப்பட வேண்டும்.

திருக்குறள் மனிதர்களிடம் பரவ

    திருக்குறளில் இல்லாத கருத்துக்கள் இல்லை என்று கூறலாம். அத்தனை நீதிகளும், அத்தனை வாழ்க்கைக்கான நெறிமுறைகளும் திருக்குறளில் உள்ளன. பேருந்துகளில் திருக்குறள்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுடன் தமிழிலோ ஆங்கிலத்திலோ அத்திருக்குறளுக்கான பொருளும் சேர்த்து எழுதப்பட வேண்டும் எனத் திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறுகிறார். மேலும் நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் பேருந்துகளில் டிஜிட்டல் பலகைகள் கொண்டுவரப்பட்டு அதில் திருக்குறள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற குறட்பாக்கள் அப்பலகைகளில் ஓட வேண்டும். அதாவது இன்று நட்பு தினம் என்றால் நட்புக்கான குறட்பாக்கள் பேருந்தின் டிஜிட்டல் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும், தேர்தல் என்றால் ஆட்சியாளரின் கடமை, குடிமகனின் கடமை குறித்த குறட்பாக்கள் பொருளுடன் டிஜிட்டல் பலகைகளில் ஓட வேண்டும் என்று திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறுகிறார்.

by Lakshmi G   on 06 Oct 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.