LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- இனத்தின் தொன்மை

அழிந்து வரும் தொல்லியல் களங்கள்!!!.

இரவிமங்கலம் தொல்லியற்களம் என்பது பழனியிலிருந்து 12 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள இரவிமங்கலம் பகுதியில் காணப்படும் தொல்லியல் எச்சங்களின் பகுதியாகும்.


பெருங்கற்கால சின்ன வகைகளான புதைமேடுகள், கற்படுக்கைகள், கல்திட்டைகள், குத்துக்கல், நடுகல், கல்லரண், கல்வட்டம் போன்ற அனைத்தும் இந்த களத்திலேயே கிடைக்கின்றன.அதனால் இக்களத்தை பெருங்கற்கால எச்சங்களின் களஞ்சியம் என்று கூறுகின்றனர்.


இந்த சின்னங்களின் விட்டம் 5 - 30 மீட்டர்கள் வரை வெவ்வேறு அளவிலுள்ளன.


யவனர் மூலம் தமிழக்த்துக்கு வந்ததாக கருதப்படும் அம்ப்போரா மதுச்சாடிகள் இங்கு கிடைப்பதால் இக்களம் யவனர் வணிகத்தளமாக விளங்கியதை அறிய முடிகிறது. இரவிமங்கலத்தின் கிழக்கே 6 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள கலையமுத்தூரில் 63 ரோமானிய தங்கக்காசுகள் கிடைத்தது இதை மேலும் உறுதி செய்கிறது.


உலகின் மிகப்பெரும் பெருங்கற்காலத் தளமாக கருதப்படும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் இந்த இரவிமங்கலம் தளம் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டதாக தெ. வே. நாராயணமூர்த்தி என்ற ஆராய்ச்சியாளர் கருதுகிறார். இந்த எச்சங்கள் 200 ஏக்கர்களில் மிக நெருக்கமாகவும், 300 ஏக்கர்களில் பரவலாகவும், 500 ஏக்கர்களில் சிதறியும் காணப்படுவதாக இவர் கருதுகிறார்.


இங்கு இரும்பு உருக்காலைகள் இரண்டு இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும், இரும்பு அச்சுகள் ஏராளமாக கிடைப்பதாகவும் அதை கொண்டு தமிழகத்தின் இரும்புக்காலத்தை கி.மு. 8000 வரை கொண்டு செல்ல முடியும் என்பது இவர் துணிபு.


தற்போது இக்களம் அழிந்து வரும் தொல்லியற்களங்களின் பட்டியலுள் உள்ளது.

 

நன்றி : தெ.வெ. நாராயணமூர்த்தி

by Swathi   on 19 Nov 2014  0 Comments
Tags: Archaeological Sites   தொல்லியல்   Archaeological Sites   தொல்லியல் களங்கள்           
 தொடர்புடையவை-Related Articles
அழிந்து வரும் தொல்லியல் களங்கள்!!!. அழிந்து வரும் தொல்லியல் களங்கள்!!!.
ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை !! ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.