LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

என்னதான் செய்வது?

" டிங்.....டிங்.... டிடிங்...... அதிகாலையிலெ அந்தச் சத்தத்தைக் கேட்டுத்தான் வீட்டுக் கதவுக தெறக்கும். பாத்திரங்களோட பெண்களும் குழந்தைகளும் வெளியே வருவாங்க.

அது வேறுயாருமில்லே. நம்ம பால்கார முனியாண்டியோட குதிரைவண்டிச் சத்தம் தான் அது. இந்த ஒலகிலேயே குதிரை வண்டியில பால் விக்கற ஓரேயாளு நம்ம முனியாண்டிதான்.

முனியாண்டியோட குதிரை நல்லமொழு மொழண்ணு இருக்கும். வண்டியோட அடியிலே குதிரைக்கு சாப்பிடறதுக்கு எப்பவும் ஒரு கட்டுப் புல் இருக்கும்.
குதிரையோட கழுத்திலெ ஒரு மணி இருக்கும். அதுதான் அந்தச் சத்தம். வியாபாரம் நல்ல நடக்குதுண்ணு அந்த வண்டியையும் குதிரையயும் பாத்தாலே தெரிஞ்சுக்கலாம்.

முனியாண்டியோட குதிரைக்கு எந்தெந்தத் தெருவிலெ எந்தெந்த வீட்டுக்காரங்க பால்வாங்குவாங்கண்ணு தெரியும். ஒரு தெருவுக்குள்ள நொழஞ்சா அது சரியாக
பால் வாங்ற வீட்டுக்கு முன்னாடி வந்து நிண்ணுட்டு கழுத்தை அப்படியும் இப்படியும் ஆட்டும். அவ்வளவுதான் சொல்வச்சமாதிரி வீட்டுக்கதவுக தெறக்கும் பாத்தி
ரங்களோட ஆளுக வெளியே வருவாங்க..

இப்படி பால் வியாபாரம் செஞ்சிட்டிருந்த முனியாண்டியோட வாழ்க்கையிலெ எதிர்பாராத பேரிடி ஓண்ணு விழுந்திச்சு. ஒவ்வொரு ஊரிலும் "பால் கூட்டுறவுச்
சங்கங்கள் '' வந்திச்சு. சங்கங்கள் கொறஞ்ச வெலயில பால் ஊத்தனாங்க. அது மட்டுமா பாலை பாக்கெட்டாப் பண்ணி வீட்டுக்குவீடு போடவும் தொடங்கினாங்க.

முனியாண்டிகிட்ட பால் வாங்கிறவங்க இப்ப யாருமே இல்லை. முனியாண்டிக்கு என்னபண்ணுறதுன்னே தெரியல. குதிரைக்குத் தீனி போடணும். எனக்கும் சாப்பாடு
வேணும். இந்த குதிரை வண்டியெ வச்சுகிட்டு என்ன பண்ணலாம்ணு யோசிச்சான். பஸ் ஸ்டாண்டு நிப்பாட்டி ஊருக்கு வர்றவங்க ஏத்தி அவங்க சொல்ற எடத்தில் எறக்கி விட்டுச் சம்பாதிக்கலாம்ணு நெனச்சான்.

பஸ் ஸ்டாண்டிலெ வண்டியை நிப்பாட்டு சவாரி போலாம் சவாரி போலாணு கூப்பிட்டான். பஸ்ஸை விட்டு எறங்கின குடும்பம் முனியாண்டியோட வண்டிலெ
ஏறிச்சு . கொஞ்சம் அவசரம்ப்பா வேகமாகப் போகணும்னு முன்னாடி சொல்லிட்டாங்க.

அதுக்கென்ன வெரசா கொண்டுவிட்டறேன் எங்குதிரை பறக்கும் பாத்துக்குங்க என்று சொல்லை ஹை ஹைண்ணு சத்தம் போட்டான். குதிரை வண்டியை
இழுத்துகிட்டு ஓடிச்சு. ஆனா அடுத்த தெரு வந்ததும். ஒரு பால் வாங்குற வீட்டுக்கு முன்னாடி வந்து நின்னுச்சு.

முனியாண்டி ஹை ஹைன்னு சத்தம் போட்டுப் பார்தச்தான் வாலை முறுக்கிவிட்டான். ம்ஹீம் என்ன செஞ்சாலும் குதிர அசையாம அப்படியே நிண்ணுச்சு. வீட்டுக்கதவைத் தெறந்து யாரும் வரலியே. யாரும் வராம எப்படி அந்தக் குதிரை போகும்.

வண்டிலெ ஏறவங்க.. சரியான சாவுகிராக்கியாப் போச்சேண்ணு திட்டிகிட்டே எறங்கி நடந்தாங்க. பைசாவும் குடுக்கல.

அந்த வியாபாரமும் சரியா நடக்கிலயா. இனி என்னடா பண்றதுண்ணு நெனச்சிட்டிருந்தப்போ தேர்தலெ ஜெயிச்ச ஒரு தலைவரு ஊர்வலம் போகணும்ணு
ஆசப்படறாரு. உங்குதிரயைத் தருவியாண்ணு கேட்டாங்க அந்தத் தலவரோடு சில தொண்டருங்க. முனியாண்டி எதுண்ண என்ன எனக்குப் பணம் கெடச்சாப்
போதும்ணு அதுக்கும் ஒத்துகிட்டான். என்ன நடந்திருக்கும்ணு நெனச்சுப் பாருங்க. பால்கொடுக்கற வீட்டுக்கு முன்னாடி வந்து நின்ன குதிரை அசையாம நின்னா
ஊர்வலம் நடக்குமா? தொண்டருக முனியாண்டியை ஆடிக்காத கொறதான்.

பாவம் நம்ம முனியாண்டி என்ன செய்யறதுண்ணு யோசிச்சான். கன்னத்திலே கை வச்சு யோசிச்சான். கடைசியா அவனுக்கு ஒரு வழி தோணிச்சு. இந்தத் தடவ
அவனோட வியாபாரம் நல்ல நாடக்கவும் செய்துச்சு.

அது என்ன வியாபாரம்ணு நெனக்கிறீங்களா. காய்கறி வியாபாரம். குதிரை வண்டி பால் வாங்கற வீட்டுக்கு முன்னாடி நிக்குமா? அப்படி நிண்ணதும் முனியாண்டி,
கத்திரிக்கா, வெண்டைக்கா, தக்காளி அப்படீண்ணு அடித்தொண்டையிலெ கூவுவான் அதக் கேட்டு ஆளுக வந்து காய்கறி வாங்குவாங்க.

ஒருவழி யில்லே வேறொரு வழிண்ணு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.

by Swathi   on 30 Mar 2015  0 Comments
Tags: என்னதான் செய்வது   Ennathaan Seivathu                 
 தொடர்புடையவை-Related Articles
என்னதான் செய்வது? என்னதான் செய்வது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.