நண்ப, நினக்காக நெகிழும் என் நெஞ்சு; நின்னினிய துணைக்காகவுந்தான்.
துன்பமேசூழ முகாமிட்ட துயர்வதைக் கூடத்துள் நெடுந்துயருறும் விடுதலைநேசா¢ன் நிலையெண்ணி நெகிழும் என் நெஞ்சே
யாரொடு நோகலாம்? யார்க் கெடுத்துரைக்கலாம்?
வீதியில் கண்ணுறும் நண்பரொடு உம் துயர் பேசவும் வாயெழாது குசுகுசுக்கும் எமக்குள் உணர்வின் நசிவே உறுத்தும் பொ¢தாய்.
நீட்டிய துவக்குகளின் நெருக்குறலில் மூட்டுகள் தேடி முடங்கும் பூச்சிகளாய் மானிடவர் நாமிங்கு மரணத்துடன் சம்பாஷிக்கிறோம்.
கூனிப் போன கொள்கையர் சொல்கிறார் யுமழை காலத்தில் நுளம்புகளோடு பழக்கப்படுகிறது போல படையினரோடும் பழக்கப்படுவோம்ரு என்று, ஏதோ பொ¢ய பகிடி ஒன்றை உதிர்த்தவர் போல உரக்கச் சி¡¢த்தபடி.
தொ¢யாமல் கேட்கிறேன் நண்ப, நுளம்பின் கடியின் வலியா நுமக்கெலாம்? கொன்று போடும் கொடுமைகள் இங்கெலாம் கொசுக்கடி போல்வதொன்றா? புகையிட்டு விரட்டினால் கலையுமோ கொசுக்களைப்போல் இக்கொடுமைகள்?
தலைவரும் அவர்கள் சிறுமையும் சிறுமதியும் இன்னும் இருந்தவாறே.
சிறையுளே வதைபடும் விடுதலை நேசர் நிலை கண்டு நெகிழாதார் இவர் செய்கை, நெஞ்சுள் முள்ளாய் நெருடுமே.
நண்ப, நினக்காக நெகிழும் என் நெஞ்சு; நின்னினிய துணைக்காகவுந்தான்.
நின் துயர் நிகழ்வு என் செவியுறு கணத்தில், நான் துணுக்குற்றேன் தொடர்ந்து நடுக்குறலாயிற்றென் நெஞ்சம்.
போ¢னவாத ஒடுக்குமுறை அரசின் இராட்சதக் கரம் இளைஞா¢ல் தொடங்கி மதகுருமார், கலைஞர், புத்திஐ£விகள் மேலும் வீழ்ந்தாயிற்று. இனி என்ன? 'பத்துத் தலைகளும் இருபது கரங்களும் திக்கெல்லாம் தேடிவரும்'
என் செய்தோம்? வெறும் வாய்ச் சொல்லில் வீரராய் வன்துயர் களையும் வலிமை இல்லோமாய் என்புதோல் போர்த்திருந்து என் செய்தோம்? கையில் வெறுமனே எழுதுகோல் தா¢த்தோம்.
நண்ப, நினக்காக நெகிழும் என் நெஞ்சு; நின்டினினிய துணைக்காகவுந்தான்.
அந்தநள்ளிரவில், நட்சத்திரங்களும் நடுங்கித் துயருறும் அந்த நள்ளிரவில் இருளின் புலையர்கள் வந்து கதவைத் தட்டினர்.
கதவைத் திறந்த கணத்தினில் நீட்டிய துவக்குகளின் கத்திமுனை உமது நெஞ்சில் அழுத்தவும், அவர்கள் நையப் புடைக்கையில் எலும்புகள் நறுக்கென்ற போதிலும் நடுக்குற்றிருப்பீரோ நண்ப அந்த நள்ளிரவின் திரட்சியில் நீயும் நின் துணையும்? நானறிவேன் நீவிர் யார்க்கும் அஞ்சா நெஞ்சுரம் உடையீர்; எதையும் எதிர்கொள்ளும் ஆளுமை பெற்றீர்.
எனினும் நடுங்கா நாட்டத்து நண்ப, இது கேள் நினக்கும் துயர் வதையுறும் விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும். குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாதது ஆத்மா! இருமைகள் அதற்கில்லை என்பது வேதம்.
ஆதலின் நடுங்குதல் தவிர்க ஆத்ம நண்பனே.
வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய் எனினும் இங்கு ஓதும் உண்மை உயிர்த் துணையாமே.
நடுங்குதல் வேண்டா நினது சுயேச்சா வலுவின் கெட்டியால் உடல் - மனத் தள வலி கடந்தவன் ஆகுக.
விலங்குகள் உமது கரங்களைப் பிணிக்கலாம் விடுதலை மூச்சை விலங்குகள் என் செயும்?
வீறு கொள்! வார்கடல் தாண்டிய ராமதூதனின் ஓர்மமும் மூச்சும் உமக்குளும் எழுக!
விடுதலைப் பறவையின் தொலை நோக்கும் வீச்சும் உள்வாங்குக விறலோய்.
|