ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 40

  • Venue
    • online
    • online
    • chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
29 Sep 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திரு. கு.கண்ணபிரான், இடைநிலை ஆசிரியர்,
ஊ. ஒ. துவக்கப் பள்ளி, இராகல்பாவி, உடுமலை ஒன்றியம், திருப்பூர்.
சிறந்த செயல்பாடுகள்:
1. பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி சுற்றுவட்டார பள்ளி ஆசிரியர்களுக்கும் ஐசிடி கணினி வழிக் கற்பித்தல்.
2. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இணைக்கப்பட்ட கலிலியோ அறிவியல் கழகம் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் சார்ந்த நிகழ்வுகளையும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நடத்தி வருகிறார்.
3. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு மின் பாட பொருட்களை வழங்கி, பல மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார்.
4. அரிய வானியல் நிகழ்வுகள் தொலைநோக்கிகள் மூலமாக கிராமப்புற, மலைகிராம மாணவர்களுக்கும் , பகல் நேர வானியல் மற்றும் இரவு வான் நோக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
5.கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கல்வி தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டுக்கும் மேலாக தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.
6. தின மலர் லட்சிய ஆசிரியர் விருது,தமிழ் இந்து அன்பாசிரியர் விருது, சிறந்த அறிவியல் விழிப்புணர்வுக்காக தேசிய அளவிலான விருது, இந்த ஆண்டின் மாநில நல்லாசிரியர் விருது.
நெறியாள்கை:
திருமதி. வனஜா
இந்து கார்னேநஷன் நடுநிலைப் பள்ளி
மதுராந்தகம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய். 

 


ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 40