ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 24 || திருமதி. வே. கவிதா

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

    • 7896541230
    • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
05 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: வே.கவிதா கணித பட்டதாரி ஆசிரியை,
மேல் பிள்ளையார் பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, காஞ்சிபுரம் மாவட்டம்.
நெறியாள்கை: பேரா.கி.சதீஷ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி. திருச்சி.
அறிமுகவுரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்
தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) Indian talent Olympiad exam, துளிர் திறனறி தேர்வு, தேசிய திறனறி மற்றும் வருவாய் தேர்விற்கு பயிற்சி அளித்து மாணவர்களும் மாநில அளவில் வெற்றி (state rank holders) பெற வழி கோலுதல்.
2) கணித வகுப்பறை முழுவதும் செய்து பார்த்து கற்றல், துணைக் கருவிகள் மற்றும் கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை பயன்படுத்துவதுவுடன், கணித கருத்துக்களை கதை, பாடல், நடனம், நாடகம் மற்றும் விளையாட்டு உடன் மகிழ்ச்சி நிறைந்த கற்பித்தல் வகுப்பறை அமைத்தவர்.
3) மாதந்தோறும் கணித மன்றங்கள் நடத்தப்பட்டு விவாதங்கள், புதிர் கணக்குகளுக்கு விடை கண்டு பிடித்தல், குறிப்பாக வருடந்தோறும் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டு கிட்டத்தட்ட 200 மாணவர்கள் அவர்கள் பிறந்த தேதியில் மாயச்சதுரம் அமைத்தல்.
4) மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்தல், ரோபோடிக்ஸ் கோடிங் பயிற்சியளித்தல், ஆகிய வற்றின் மூலம் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு, சேர்க்கை அதிகரிக்க வழி கோலியவர்.
5) காஞ்சி டிஜிட்டல் டீமின் வழி மாணவர்களின் புது வாசல் மூலம் இணைய வழி வகுப்பறையில் கணித கருத்துக்களை கதை, பாடல், குறிப்பாக பொம்மைகளை பயன்படுத்தி கற்பித்தல்.
6) கடந்த ஏழு வருடங்களாக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி மற்றும் வருவாய் தேர்விற்கு பயிற்சி அளித்து அவர்களை வெற்றி பெற வழி கோலுதல்.

ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 24 || திருமதி. வே. கவிதா