ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 28

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

    • 7896541231
    • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
21 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: திருமதி. ஆ.இரா.வனஜா,
இந்து கார்னேஷன் நடுநிலைப்பள்ளி,
மதுராந்தகம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. (முன்னாள் கல்வித்துறைச் செயலர்) அவர்களின் வழியாக நேரடியாக புதிய பாடத்திட்ட 3 நாள் கருத்தரங்கில் பங்கேற்றது. ( ஜூலை 2017)
2) குழந்தைகள் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் திகழ்வது.
பாடம் சாராத வாழ்க்கைக் கல்வி (கைத்தொழிலுக்கான அடிப்படைப் பயிற்சிகள்) அன்பு அரவணைப்பை மாணவர்களுக்கு வழங்குவது.
3) தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் யோகாசனம் கற்பித்துப் போட்டிகளில் வெற்றிபெறச் செய்வது. பல்வேறு போட்டிகளில் மாணவர்களைப் பங்கு பெறச்செய்து வெற்றி பெறச் செய்வது.
ஒன்றியத்திலேயே சிறந்த யோகா ஆசிரியர் என்ற விருதினைப் பெற்றது.
4) டிஜிட்டல் கன்டென்ட் தயாரிப்புக் குழுவில் எஸ்.சி.இ.ஆர்.டி. மூலமாகவும் பெங்களூர் ஏக் ஸ்டெப் மூலமாகவும் காணொளிப் பாடங்கள் தயாரித்தது.
5) மடிக்கணினியையும் ஒலிபெருக்கியையும் பயன்படுத்தி வகுப்பறைக் கற்றலை ஆர்வமுள்ளதாக்கியது.
6) பள்ளிக்கு வெளியிலுள்ள வளங்களைப் பயன்படுத்திப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி அடிப்படைப் பயிற்சியும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் பயிற்சியும் அளித்தது.
7) 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் கணினி வழியில் பாடம் மற்றும் கணினிப் பாடம் கற்பிப்பது.
8 ) காஞ்சி டிஜிட்டல் டீம் திரு. அன்பழகன் ஆசிரியர் மற்றும் கல்வி 40 நிறுவனர் திரு.ப்ரேம்குமார் அவர்கள் மூலமாகப் பள்ளிக்கு ரூ.3,00,000/= மதிப்பிலான 4 கணினிகளை நன்கொடையாகப் பெற்றது.
9) மாற்று மருத்துவ முறைகளைப் பற்றியும் மனம் சார்ந்த மருத்துவ முறைகளைப் பற்றியும் பள்ளிக் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி சில முதலுதவிப் பயிற்சிகளையும் அளிப்பது.

ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 28