ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 38

 • Venue
  • online
  • online
  • chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
25 Aug 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
ஆசிரியர், திருமதி. தேவி தனம்
அரசு தொடக்கப்பள்ளி, அபிஷேகப் பாக்கம், புதுச்சேரி.
நெறியாள்கை:
 திருமதி. லதா பாலாஜி, திருச்சி.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. 2019 ஆம் ஆண்டு 75 ஆயிரம் ரூபாய் சொந்த செலவில் விடுமுறை நாட்களில் ஓவியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பள்ளி கட்டிடத்தின் அனைத்து சுவர்களிலும் பாடம் சார்ந்த சுவரோவியங்கள் வரைந்தோம்.
2. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்ப்பதற்காக கலைக்கூடம் பள்ளியில் உருவாக்கப்பட்டு அதில் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் பொம்மைகள் கைவினைப் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, கதை சொல்லல், ஓவியம் வரைதல் ,இயற்கை பொருட்களில் பொம்மைகள் செய்தல், பனையோலை பயிற்சி, நியூஸ் பேப்பர் காகிதங்களில் சின்ன சின்ன உபயோகப் பொருட்கள் உருவாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து பாடங்களும் பொம்மலாட்ட வடிவில் கற்பிக்கப்பட்டன. இதற்கென 20 ஆயிரம் ரூபாய் செலவில் பொம்மலாட்ட அரங்கும், விதவிதமான பொம்மைகளின் தனித்தனியாக பொம்மைகளும் உருவாக்கப்பட்டன. மாணவர்களுக்கு நிழல் பாவை கைப்பாவை பொம்மைகள் செய்ய செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
3. கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் மாணவர்களின் தொலைவுக்கு தீர்க்கும் விதத்தில் யாவரும் கேளிர் அறக்கட்டளையின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் செலவில் புத்தகங்கள் கதை புத்தகங்கள் வழங்கப்பட்டு அவற்றுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன. வாட்ஸ்அப் குழுவின் மூலம் Racy calligraphy கையெழுத்து பயிற்சியும் வழங்கப்பட்டது.
4. கடந்த நான்கு ஆண்டுகளில் மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளை அவர்களின் எழுத்து மற்றும் ஓவியத்தின் வாயிலாக பெற்று அவற்றை 12000 ரூபாய் செலவில் ஐஎம்டிபி உதவியுடன் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
5.மாணவர்களிடம் சுற்றுச்சூழல் குறித்த புரிதலை ஏற்படுத்த விதைப்பந்து தயாரித்தல் அவற்றை பயன்படுத்துதல், பழ மரக்கன்றுகள் உருவாக்குதல், ஏரி குளம் போன்ற நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு விவசாயிகளே நேரடியாக விவசாயம் குறித்த புரிதலை ஏற்படுத்துதல், பறவை உற்றுநோக்கல், விதைத் திருவிழா, விதைகள் வழங்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் இயற்கையின் பல்லுயிர் தன்மை குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட்டது.

ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 38
Share to Social World