ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் முப்பெரும் விழா - வேலூர், இந்தியா

  • Venue
    • ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவு
    • ஆண்டியப்பனூர்
    • வேலூர்
    • Tamil nadu
    • India
  • Organizer

    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை

    • 9944457603
Events Schedule
DATE TIMINGS
23 Nov 2018 11.00 AM

ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் முப்பெரும் விழா!...

நவம்பர் – 23, வெள்ளிக்கிழமை - 2018, மிகப் பெரிய அளவில் ’முப்பெரும் விழாவை’ ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் கொண்டாடப் போகிறோம். அதென்ன முப்பெரும் விழா!...’ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவைப் பற்றி பிரத்யேகமாக ஒரு நூல் வெளியீடு… சித்த மருத்துவப் பிரிவில் நூலகம் திறப்பு… ஐந்தாம் ஆண்டு மூலிகை கண்காட்சி…’ எனப் முப்பெரும் விஷயங்கள் அன்று நடைபெற இருக்கின்றன.

மிகப் பெரும் ஆளுமைகள் வருகைத் தந்து சிறப்பிக்க இருக்கிறார்கள்! விவரங்கள் பத்திரிக்கை படத்தில்!... செவிக்கு உணவாக ஆளுமைகளின் மொழி உங்களுக்காக! எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிறப்பு மருத்துவர்கள் என ஆண்டியப்பனூர் மகிழப் போகிறது!...

தாவரக் கவிகையில் இளைப்பாற… புத்தக வாசனையில் லயிக்க, மூலிகைகளோடு கவிபாட… மாணவர்களை ஊக்கப்படுத்த… அவசியம் வாருங்கள்!...

பாரம்பரிய உணவுக் கண்காட்சி, உணவுகள் சார்ந்த விழிப்புணர்வு, மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான உரை என களைக்கட்டப் போகிறது ஆண்டியப்பனூர்!... நிகழ்ச்சியை சிறப்பிக்கப் போவது நீங்கள் தான்… வாருங்கள், கொண்டாடுவோம்!... பள்ளி மாணவர்களையும் பொது மக்களையும் அழைக்கிறோம்!...

நிகழ்ச்சி தொடர்பான விவரங்களுக்கு… மரு.வி.விக்ரம்குமார் - 9944457603

மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)


ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் முப்பெரும் விழா - வேலூர், இந்தியா