ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி - மதிய விருந்து - டெலவர், அமெரிக்கா

 • Venue
  • Hockessin Montessori School
  • 1000 Old Lancaster Pike
  • Hockessin
  • Delaware - 19707
  • USA
 • Organizer

  டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்

  • 6095055394, 6102139181
Events Schedule
DATE TIMINGS
23 Dec 2017 11.00 AM to 04.00 PM

ஹார்வர்டு தமிழ் இருக்கை - மதிய விருந்து அழைப்பிதழ்.

தமிழ் மொழியை அமெரிக்க மண்ணில் நம்முடைய அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல அயராது உழைக்கும் தமிழ்ப் பள்ளித் தலைவர்களே, செயல்பாட்டாளர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே, பெற்றோர்களே!

உங்களனைவருக்கும் வணக்கம்!  

 நீங்கள் அனைவரும் “ஹார்வர்டு தமிழ் இருக்கை பற்றி” (Harvard Tamil Chair, in short HTC)  ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள். மொழிகள், மானிடவியல், வரலாறு, அரசியல், அறிவியல், மருத்துவம், மேலாண்மை என எல்லாத் துறைகளிலும் உலகின் முதல் இடத்தில் ஹார்வர்டு இருக்கிறது என்றால் மிகையாகாது. அங்கு ஒருநிரந்தர தமிழ் ஆராய்ச்சித் துறை ஏற்படுத்தப் பட்டு, உலகெங்கும் பிற பல்கலைக்கழகங்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் அங்கு தமிழ் மொழியிலோ அல்லது தமிழ்மொழி தொடர்பான பாடங்களை ஆங்கிலத்திலோ கற்க முடியுமென்றால் அது பிற அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ்மொழி அங்கீகரிக்கப்படும்பெரும் திறப்பை ஏற்படுத்தும்.

“ஹார்வர்டு தமிழ் இருக்கை” (HTC) க்கான நிதி திரட்டும் முயற்சி மிகத் துரிதமாக நடை பெற்றுக்கொண்டிருப்பதை அறிவீர்கள்.  சிறு குழந்தைகள் முதல், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கங்கள், மற்றும் தமிழக அரசு வரை பங்களிப்பு செய்து, மொத்தம் 5 மில்லியன் வெள்ளிகள்  திரட்டப்பட்டிருக்கிறது.  இன்னும் 3 மாதங்களில், மீதமுள்ள 1 மில்லியன் வெள்ளிகள்  திரட்டப்படவேண்டும்.  நமது டெலவர் பெருநில தமிழ்ச்சங்கம், நிதி திரட்டும் குழு உருவாக்கி நம்மால் இயன்ற உதவியைச் செய்யஇருக்கிறது.

“ஹார்வர்டு தமிழ் இருக்கை” பற்றிய நம் அனைவருடைய கேள்விகளுக்கும் விடையளிக்கவும், நம் கருத்துகளைப் பெறவும் டெலவர் பெருநிலப்பகுதியில், டிசம்பர் 23, 2017 (சனிக்கிழமை) அன்று, மதிய விருந்து ஏற்பாடு செய்து இருக்கிறோம்.  இந்த விருந்தில் இருக்கை ஒருங்கிணைப்பாளர்களும்,   நமது உள்ளூர் ஆர்வலர்களும்  நம்முடன் சில மணி நேரங்கள் உடனமர்ந்து அளவளாவ இருக்கிறார்கள்.  இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள உங்கள் அனைவரையும் உங்கள்குடும்பத்துடன்  அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: Hockessin Montessori School, 1000 Old Lancaster Pike, Hockessin, DE 19707

காலம்: Saturday, December 23, 2017,    11 - 4 PM EST


ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி - மதிய விருந்து - டெலவர், அமெரிக்கா
Share to Social World