தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 23

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
13 Jul 2021 5.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்:
கே. சுமதி,
தலைமை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எஸ். கே. சி ரோடு
ஈரோடு.
 
நெறியாள்கை:
திரு. அன்பழகன்,
பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
 
தமிழ்ப்பாடல்:
செல்வி. பவதாரிணி ,
துபாய்.
 
சிறந்த செயல்பாடுகள்:
1. தலைமையாசிரியராக பதவியேற்ற பள்ளியில் 77 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கையை தற்போது 277 ஆக உயர்த்தியது. நான்கு ஆசிரியராக இருந்த ஆசிரியர் பணியிடங்களை தற்போது 11 ஆக உயர்த்தியது.
2. மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து மன ரீதியாக ஆலோசனை வழங்கி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்கால பயம் நீக்கி அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல்
3. மாணவர்களின் பன்முக திறமையை மேம்படுத்த ஓவியம், கணினி,ஆங்கிலப் பயிற்சி, நடனம் செஸ் முதலியவை கற்றுத்தர தன்னார்வலர்களை நியமித்து சிறந்த முறையில் பயிற்சி தருவது.
4. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளி மற்றும் ஒன்றிய அளவில் சிறந்த பள்ளி மற்றும் சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருது.
5. மாவட்ட மாநில தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்களை ஊக்குவித்தல், புத்தகம் வாசித்தல், கதை கூறுதல், நாட்டுப்புற கலைகளை ஊக்குவித்தல்.
6. கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களை வரவழைத்து அறிவியல் மற்றும் என் எஸ் எஸ் பற்றிய கருத்தரங்குகள் நடத்துவது.. பள்ளியில் நேர்மை அங்காடி அமைத்து மாணவர்களை சிறுவயதிலிருந்தே நேர்மையுடன் நடந்து கொள்ள பழக்கப்படுத்துவது.

தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 23