கற்க கசடற, வலைத்தமிழ்,வள்ளுவர் குரல் குடும்பம்
DATE | TIMINGS |
---|---|
05 Jan 2024 | 6.30pm |
நவில்தொறும் நூல்நயம்🌸 வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் நிகழ்வு-45
நாள்: 05/01/2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி
நூல்: புதிய பார்வையில் திருக்குறள்
ஆசிரியர்: முனைவர் இர. பிரபாகரன்
நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் முனைவர் இர. பிரபாகரன் அறிவியல் துறையில் தன்னிகரற்று விளங்கியது மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களையும் தமிழர் பண்பாட்டையும் அயல் மண்ணான அமெரிக்காவில் பறைசாற்றும் வண்ணம் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்து அமெரிக்காவின் வாஷிங்டனில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார். அதை இயக்கமாக மாற்றும் விதமாக எழுதியும், பேசியும், செயலாற்றியும் வருகிறார். மேலை நாடுகளில் முதன்முறையாக நடத்தப்பட்ட பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர். செந்தமிழ் இலக்கியங்களை, கற்றும் கற்பித்தும் இன்பம் காண்பவர். அவர் அமெரிக்க தமிழ் வானொலியில் நிகழ்த்திய “திருக்குறள் சிந்தனைகள்” என்ற தொடர் சொற்பொழிவின் நூல் வடிவமே “புதிய பார்வையில் திருக்குறள்” என்ற இந்த நூலாகும். The Ageless Wisdom (As embodied in Thirukkural) மற்றும் “Valluvar’s Answers to Vital Questions” என்பன திருக்குறள் குறித்த இவரது மற்ற நூல்களாகும். நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் த வசந்தாள் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மொழியியலில் நிறை சான்றிதழ் பெற்றவர். தமிழில் மட்டுமின்றி இந்தி, வடமொழி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பட்டங்களை பெற்றுள்ளார். இராணி மேரி கல்லூரியின் பொன்விழாப் பரிசு பெற்ற சிறப்புக்குரியவர். 'தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள்', 'சங்க இலக்கியத்தில் மனித நேயம்', சிலம்பு காட்டும் சமுதாயம், சித்தர் பாடல்களில் பெண்கள் சித்தரிப்பு, பெரிய புராணம் கள ஆய்வு ஆகியன இவரது நூல்களில் சிலவாம். உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர் 'முளைப்பாரி' பற்றிய நாட்டுப்புறப்பாடல் மற்றும் குறுந்தொகை குறித்து youtubeஇல் உரை நிகழ்த்தி வருகிறார். 'கற்பக விருக்ஷம்' என்ற பெயரில் சிறுவர்களுக்கு கதை சொல்லி வருகிறார். ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை இதே நேரம், இதே இணைப்பு. Join Zoom Meeting https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09 Zoom ID: 988 6476 9563 Passcode: 1330 நவில்தொறும் நூல்நயம் : வெள்ளிதோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர்நிகழ்வு- 45 நாள்: 05/01/2024 வெள்ளிக்கிழமைநேரம்: மாலை 06:30-07:45 மணி நூல்: புதிய பார்வையில் திருக்குறள் ஆசிரியர்: முனைவர் இர. பிரபாகரன் நூல்-நூலாசிரியர் குறிப்பு: நூலாசிரியர் முனைவர் இர. பிரபாகரன் அறிவியல் துறையில் தன்னிகரற்று விளங்கியது மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களையும் தமிழர் பண்பாட்டையும் அயல் மண்ணான அமெரிக்காவில் பறைசாற்றும் வண்ணம் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் சார்ந்து அமெரிக்காவின் வாஷிங்டனில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார். அதை இயக்கமாக மாற்றும் விதமாக எழுதியும், பேசியும், செயலாற்றியும் வருகிறார். மேலை நாடுகளில் முதன்முறையாக நடத்தப்பட்ட பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர். செந்தமிழ் இலக்கியங்களை, கற்றும் கற்பித்தும் இன்பம் காண்பவர். அவர் அமெரிக்க தமிழ் வானொலியில் நிகழ்த்திய “திருக்குறள் சிந்தனைகள்” என்ற தொடர் சொற்பொழிவின் நூல் வடிவமே “புதிய பார்வையில் திருக்குறள்” என்ற இந்த நூலாகும். The Ageless Wisdom (As embodied in Thirukkural) மற்றும் “Valluvar’s Answers to Vital Questions” என்பன திருக்குறள் குறித்த இவரது மற்ற நூல்களாகும். நூல் அறிமுகம் செய்வார்: முனைவர் த வசந்தாள் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மொழியியலில் நிறை சான்றிதழ் பெற்றவர். தமிழில் மட்டுமின்றி இந்தி, வடமொழி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பட்டங்களை பெற்றுள்ளார். இராணி மேரி கல்லூரியின் பொன்விழாப் பரிசு பெற்ற சிறப்புக்குரியவர். 'தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள்', 'சங்க இலக்கியத்தில் மனித நேயம்', சிலம்பு காட்டும் சமுதாயம், சித்தர் பாடல்களில் பெண்கள் சித்தரிப்பு, பெரிய புராணம் கள ஆய்வு ஆகியன இவரது நூல்களில் சிலவாம். உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர் 'முளைப்பாரி' பற்றிய நாட்டுப்புறப்பாடல் மற்றும் குறுந்தொகை குறித்து youtubeஇல் உரை நிகழ்த்தி வருகிறார். 'கற்பக விருக்ஷம்' என்ற பெயரில் சிறுவர்களுக்கு கதை சொல்லி வருகிறார். ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமைஇதே நேரம், இதே இணைப்பு.
Join Zoom Meeting: https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
Zoom ID: 988 6476 9563 Passcode: 1330