Science of Pranayama Workshop by Dr.Sundar Balasubramanian

 • Venue
  • Sterling Library,Meeting Room A + B Sterling, VA
  • 22330 South Sterling Boulevard A117, Sterling, VA
  • Sterling
  • Virginia - 20164
  • USA
 • Organizer

  Rajababu

  • 203-252-7590
  • events@valaitamil.com,rajababu_p@yahoo.com
  • http://events.valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
22 Apr 2018 1:30 PM - 4:30 PM

Science of Pranayama Workshop

மூச்சுப் பயிற்சி (பிராணாயாம) அறிவியல் உரையும் செய்முறை விளக்கமும்

Dr.Sundar Balasubramanian

Objective:

The objective of this program is to spread the scientific basis for the practice of Pranayama based on Thirumanthiram, and to share some key practices for improving well being, and reducing stress at all ages. This is open for anyone and at all stages of Yoga practice. No Yoga mat or apparel necessary. No large meal two hours prior to the class.

 

Speaker Profile:

Cell Biology researcher at the Medical University of South Carolina,USA. -Yoga Biology researcher - Founder/Director of PranaScience Institute - Researcher of Yogic breathing and health disease - Conduct workshops in Pranayama - Author of “PranaScience: Decoding Yoga Breathing” - Speaker of TEDx - Founder Director of Yoga Education Trust in India.

 

டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன், பிஎச்.டி, தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகம், சார்ள்ஸ்டன், தென் கரோலினா

திருமூலரின் திருமந்திரம் உட்படப் பல்வேறு சித்தர் பாடல்களிலுள்ள மூச்சுப் பயிற்சி முறைகளில் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர் டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பல்வேறு தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பேட்டிகளை அளித்தும், உலகளாவிய அளவில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தியும், உரையாற்றியும் மூச்சுப் பயிற்சி முறைகளின் அடிப்படை அறிவியலைப் பரப்பி வருகிறார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் நீங்கள் சில எளிய மூச்சுப் பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளலாம், அவற்றின் பயன்களைத் தெரிந்துகொண்டு நாள்தோறும் பயிலலாம். மூச்சுப் பயிற்சி முறைகள் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியைத் தூண்டுபவை. நம் உடலில் வேதி மாற்றங்களை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு, நினைவாற்றல், மற்றும் பொதுவான உடல்நலத்தை மேம்படுத்தக் கூடியவை. இந்தப் பயிற்சிகளை ஆரோக்கிய வாழ்வுக்காகவும், புற்று நோய் (மார்பகம், நுரையீரல், இரத்தம், மூளை, தலை/கழுத்து போன்றவை) போன்ற கொடிய நோய்களிலிருந்து தேற்றிக் கொள்ளவும் டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன் தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகம் (Medical University of South Carolina), ரோப்பர் மருத்துவமனை (Roper Hospital), ஹோப் விடுதி (Hope Lodge) மற்றும் உலகம் முழுதும் இப்பயிற்சிகளைக் கற்றுத் தந்து வருகிறார்.

 

டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன் தமிழகத்தில் பரம்பரையாகச் சித்த மருத்துவம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். யோகக் கலைகளைக் குடும்பத்திலேயே பயின்று பின்னர் சுவாமி சித்பவானந்தர் நிறுவிய விவேகானந்த குருகுலக் கல்லூரியில் பயின்றவர். மருத்துவ ஆராய்ச்சிக்காக அமெரிக்காவிற்கு வந்து குடியேறியிருப்பவர். தென் கரோலினாவிலுள்ள சார்ள்ஸ்டன் நகரில் வசிக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம், வர்ஜீனிய மாநிலத்தின் யோகாவில், மற்றும் பற்பல யோக நிலையங்கள், குருமார்களிடம் யோகக் கலைகளைக் கற்றவர். ஆசனம், பிராணாயாமம், உச்சாடாணம், பாடல்கள், தியானம் ஆகிய யோக முறைகளைக் கற்றுத் தருபவர். மூச்சுப் பயிற்சியைக் குறித்த புகழ்பெற்ற இவரது TEDx உரையை இங்கே காணலாம்: http://tedxtalks.ted.com/video/The-Science-Of-Yogic-Breathing

 

மொழி: பயிற்சி வகுப்புகள் ஏற்பாட்டாளர்களின் தேவைக்கேற்பத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இடம்பெறும்

கால அளவு: இரண்டு மணி நேரம். தேவைக்கேற்பக் கூடுதலாகவோ குறைவாகவோ வைத்துக்கொள்ளலாம். நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிவடையும். 5 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வருவதைத் தவிர்க்கவும்.   

வயது வரம்பு: 10 முதல் 79 வயது வரை (4-10 வயதுக் குழந்தைகளுக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் தனி வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்படும்)

இருக்கை: நாற்காலி, தரை, யோக விரிப்பு, வசதிக்கேற்ப இதர இருக்கைகள்

இடம்: வகுப்பறை, அரங்கம், திறந்தவெளி (சத்தம் இல்லாத, காற்றோட்டமுள்ள இடம்)

நேரம்: உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில், அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் கழித்தே இப்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக, மதியம் 1 மணிக்கு உண்ட பின், 3 மணிக்குப் பிறகே பயிற்சி செய்ய வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகள் சிறப்பானவை.  

உடை: இடுப்பை இறுக்காத, எந்த உடையும் சரியே

ஆசனங்கள்: மூச்சுப் பயிற்சிப் பட்டறையில் எவ்வித ஆசனப் பயிற்சிகளும் இடம் பெறாது

பதிவுகள்: நிகழ்ச்சியை ஒலி/ஒளிப் பதிய அனுமதி இல்லை.

அமைதி: நிகழ்ச்சியின்போது செல்பேசிகள், சத்தம் எழுப்பக்கூடிய கடிகாரம் போன்ற கருவிகளை அமைதி நிலையில் வைத்திருக்கவும்.  

வசதியான நாட்கள்: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள், அல்லது அமெரிக்க தேசிய விடுமுறை நாட்கள்

www.PranaScience.com


Science of Pranayama Workshop by Dr.Sundar Balasubramanian

Registeration