தமிழ் மக்கள் மன்ற இலக்கிய வட்டம் - புத்தகக் கலந்துரையாடல்

 • Venue
  • பர்லிங்டன் மனமகிழ் மையம் (Burlington Recreation Center)
  • 61 Center St
  • Burlington
  • Maryland
  • USA
 • Organizer

  தமிழ் மக்கள் மன்றத்தின் இலக்கிய வட்டம்

  • 7815357872, 6177847736
  • illakiyavattam@tmm-usa.org
Events Schedule
DATE TIMINGS
07 Dec 2019 மாலை 3:30 - 7:00 மணி

தமிழ் மக்கள் மன்றத்தின் இலக்கிய வட்டம் வாயிலாக நியூ இங்கிலாந்தின் தமிழன்பர்களை மீண்டும் சந்திப்பதில் பேருவகைக் கொள்கிறோம். நீங்கள் சினிமா ரசிகரா...? புத்தக வாசிப்பில் பிரியமுள்ளவரா...? மேடை விவாதங்களில் விருப்பமுள்ளவரா...? அட, ஆமாம் என்கிறீர்களா? அப்படியென்றால், உங்களுக்கான சரியான களம் இதோ....
“தமிழ் மக்கள் மன்ற இலக்கிய வட்டம் - புத்தகக் கலந்துரையாடல்”

நிகழ்வு நாள் - டிசம்பர் 7, 2019
நேரம் - மாலை 3:30 - 7:00 மணி
புத்தகம் - பூமணியின் “வெக்கை”
இடம் - பர்லிங்டன் மனமகிழ் மையம் (Burlington Recreation Center)
61 Center St, Burlington, MA

பங்கேற்பாளர்களுக்கு மற்றுமொரு சுவாரஸ்யமான செய்தி. கல்வி, பொருளாதார தன்னிறைவு மற்றும் அதிகாரம் மட்டுமே சமூக அவலங்களைக் களைய ஒரே வழி என்று ஆழமான சிந்தனையை விதைத்திருக்கும் திரைப்படம், சமீபத்தில் வெளிவந்த வெற்றமாறனின் “அசுரன்”. இது திரு. பூமணி அவர்களின் “வெக்கை” நாவலைத் தழுவி படமாக்கப்பட்டுள்ளது. வெக்கையைப் படித்துவிட்டு , அசுரனைப் பார்த்துவிட்டு வாருங்கள் !!!
பேசலாம்... விவாதிக்கலாம்... கலந்துரையாடலாம்...

உங்கள் பார்வையில் 10 நிமிடங்களில் இந்த நாவலைப்பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

illakiyavattam@tmm-usa.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் .

தொடர்பு எண்கள் :
கார்த்திகைப் பிரியா - 7815357872
இராஜசிங் - 6177847736

“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”

இவண்
தமிழ் மக்கள் மன்ற இலக்கிய வட்ட நண்பர்கள்


தமிழ் மக்கள் மன்ற இலக்கிய வட்டம் - புத்தகக் கலந்துரையாடல்