LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆண்டிபயாடிக் அதிகமாக பயன்படுத்தினால் நுண்கிருமிகள் மருந்திற்கு கட்டுப்படாது- உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்தினால் நுண்கிருமிகள் மருந்துக்கு கட்டுப்படாமல் போகும் நிலை உலக அளவில் மிகப் பெரிய  அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது.

2019ம் ஆண்டில் உலகின் மிக மோசமான 10 சுகாதார அச்சுறுத்தல்களை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது. எச்.ஐ.வி, எபோலா, டெங்கு, காற்று மாசுபாடு, பருவநிலை மாற்றம், தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் உள்ளிட்டவை மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களாக உள்ளன. 
உலகின் மிக மோசமான 10 சுகாதார அச்சுறுத்தல்களின் பட்டியல்:

1. காற்று மாசுபாடு - நுண்ணிய மாசுகள் மூச்சுக்குழாய் மற்றும் ரத்த ஓட்டத்தில் மிக எளிதாக ஊடுருவி நுரையீரல், இதயம் மற்றும் மூளையைப் பாதித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

2. தொற்றா நோய்கள் - சர்க்கரைநோய், புற்றுநோய், இதயநோய் போன்ற தொற்றாநோய்கள்.

3. சளி, காய்ச்சல் தொற்று - எப்படியான சூழ்நிலையில், எதன் காரணமாக சளி, காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது.

4. வாழும் சூழலால் ஏற்படும் ஆரோக்கியமின்மை -  வறட்சி, பஞ்சம், போர் மற்றும் போதுமான மருத்துவச் சேவைகள் கிடைக்காமை போன்ற சூழலில் வாழ்ந்து வருபவர்களுக்குச் சுகாதாரச் சீர்கேட்டால் ஏற்படும் நோய்கள் அதிகமாகக்கூடும்.

5. ஆன்டிபயாடிக் மருந்துகள் - சில ஆண்டிபயாடிக் மருந்துகள் உடலில் இயற்கையாகவே செயல்படும் எதிர்ப்புத் திறனைத் தடுக்கிறது.

6. எபோலா - எபோலாவைப் போன்றே உடலின் உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் ஜிகா, நிபா போன்ற காய்ச்சல் வகைகள் மற்றும் சுவாசக் குழாய் பாதிப்புகள் இந்த ஆண்டும் ஏற்படக்கூடும்.

7. முதன்மையான ஆரோக்கியப் பராமரிப்பு: குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் எந்தவொரு நோய் பாதிப்பையும் ஆரம்பநிலையிலேயே சரிசெய்ய முடியும்.

8. தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் - ஒவ்வோர் ஆண்டும், 30 முதல் 40 கோடி இறப்புகள் சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தடுக்கப்படுகிறது. 

9. டெங்கு - கடந்த 2 வருடங்களில், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காய்ச்சல் டெங்கு. 

10. ஹெச்.ஐ.வி. - ஹெச்.ஐ.வி. பாதிப்பு குறித்த விழிப்பு உணர்வுகள், முன்பைவிட தற்போது அதிகரித்து வருகிறது. 

இந்த பட்டியலில் நுண்கிருமிகள் மருந்துக்கு கட்டுப்படாமல் போகும் நிலையும் இடம்பெற்று உள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகளை வரைமுறை இல்லாமல் பயன்படுத்தும் நிலை தொடருமானால் நிமோனியா, டிபி, போன்றவற்றைக் குணப்படுத்துவது கடினமாக இருந்த பழங்கால நிலைக்கு திரும்ப நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது. 

ஆண்டிபயாடிக் மருந்துகளை வரையறையில்லாமல் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதோடு மறைமுகமாக உணவுச் சங்கிலி மற்றும் நீரிலும் நுழைந்து விடும் நிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய செயல் திட்டம் வகுத்துள்ளதுடன் ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளது.

by Mani Bharathi   on 29 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Tamil Summer Camp, எளிதாகத் தமிழ் பேச, எழுதப் பழகுவோம்.. Tamil Summer Camp, எளிதாகத் தமிழ் பேச, எழுதப் பழகுவோம்..
மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா
பேரவையின் 33வது தமிழ் விழா பேரவையின் 33வது தமிழ் விழா
உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்.. உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..
தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள் தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்
சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது
சிகாகோவில் சிகாகோவில் "திருவள்ளுவர் தினம்" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.