LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

குடும்ப வன்முறை என்றால் என்ன?

குடும்ப வன்முறை: 


உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. 


கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, கையில் கிடைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல்லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்முறை. 


இது கணவன் - மனைவி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமென்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். 


சந்தேகப்படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது போன்றவை மன ரீதியான வன்முறைகள். தேவையில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்தமிடுவது, கட்டியணைப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல்வது பாலியல் ரீதியான வன்முறைகள்.


இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது? 


இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுவதாக புள்ளி விவரம் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது 2005ம் ஆண்டு அமலுக்கு வந்துவிட்டது.


இதன்படி கணவன் தன் மனைவியை அடித்தாலோ அல்லது அவமானப்படுத்தி துன்புறுத்தினாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் கிடைக்கும். 


பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா? 


குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண்டும் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில மாதங்களுக்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்திருக்கிறது. 


‘பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற்றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண்களும் பெண்களுக்கு எதிராக புகார் செய்யலாம்’ என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்தச் சட்டம் பயனுள்ளதா?


நிச்சயமாக. ஆனால், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங் போன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு விட்டன. அவை அமலுக்கு வந்தும் ஆண்டுகள் பலவாகின்றன. ஆனால், இன்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமை பல சமூகங்களில் நடைமுறையில் வெளியே தெரியாதவாறு இயங்குகின்றன. குழந்தைத் திருமணம் குறிப்பிட்ட சில சமூகங்களிலும், வட மாநிலங்களிலும் நிலவுகின்றன. ஈவ் டீசிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் போலவே குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டமும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது.


இதற்கு என்ன காரணம்? 


உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத்தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. அதற்கு அவர்களது வளர்ப்பு முறையும் இடம் தரவில்லை. இந்திய கலாசாரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்தும் இதற்கு இடம் தருவதில்லை. எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அதனால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாக இருக்கிறது.

by Swathi   on 21 May 2014  14 Comments
Tags: குடும்ப வன்முறை சட்டம்   Family Violence Protection Act                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
19-Jan-2021 16:55:27 Meenakshi said : Report Abuse
Sir My Husband yen Two children yen Amma veetuku 3 years achu ennaiyum vetala 3 years Romba Probalam yeena pandrathu nu theriala pls help me
 
19-Jun-2020 17:17:18 Sathiyapriya said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 1 வயதில் மகன் இருந்த நிலையில் எனது கணவர் வாகன விபத்தில் இறந்தார். 3 வருடங்களுக்கு பிறகு எனது வீட்டில் என்னை போல மனைவியை இழந்து ஒரு பெண் குழந்தை யுடன் இருந்த ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். தற்போது எனது கணவரின் தாயும் சகோதரிகளும் என்னை தகாத வார்த்தைகளால் என் கடந்த கால வாழ்க்கை பற்றி பேசுகின்றனர். நான் ராசியில்லாதவள் என கூறி என் மனதை புண்படுத்துகின்றனர்.. இதற்கு சட்டமபடி என்ன செய்வது?
 
18-Jan-2020 04:22:45 navaneethakannan said : Report Abuse
என் பேமிலி பிரச்சனை என் மனைவி அவளின் அம்மா ௨ அக்கா பேச்சை கேட்டு கொண்டு தனியா போகலாம் சொலிகிறாள் சொந்த வீடு இருந்தும் அம்மா அக்கா வீடு பக்கத்துல இருக்கலாம் சொல்லிராக என் மகன் 1 வயது ஆகிறது என் அம்மா அப்பாகு நான் ஒரே மகன் அவர்களை விட்டு பிரிய வேண்டிய நிலைமை இருக்கான் ஏதும் பேசினால் சட்டப்படி பண்ணுங்க சொல்லிராக ஏதும் சட்டம் உண்டா மேடம்/சார்
 
10-Jan-2020 15:02:48 ரா.முத்து கருப்பன் said : Report Abuse
நான் கலப்பு திருமணம் செய்துள்ளேன்.குடும்பத்தில் உள்ளவர்களால் வெறுக்கப்படுகிறேன் என் தாயாரின் வீட்டில் நான் பிறந்த நாளில் இருந்து இருந்து வருகிறேன் என் பெற்றோர் சம்மதத்தில் கலப்பு திருமணம் செய்தேன் அவர்களும் ஆசி வழங்கினார்கள் என் உடன் பிறந்தவர்கள் என் தாயாருக்கு வேண்டாததை சொல்லி எனிடமும் என் மனைவியிடமும் வெறுப்பை உண்டாக்கினார்கள் நான் என் தாயார் என் தகப்பனார் என் மனைவி ஏன் மூத்த சகோதரி என் மூத்த சகோதரர் என் இளைய சகோதரர் என ஏல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம் அதன் பிறகு சகோதரர் சகோதரிக்கு திருமணம் நடந்தது பிறகு சிறிது காலத்தில் என் தகப்பனார் இறந்து விட்டார் என் அன்னிக்கு வளைகாப்பு போட்டார்கள் என் மனைவியும் கர்பமாக இருந்தார் வளைகாப்பில் கலந்துக்க guடaது ஏன்றார்கள் நாங்கள் கலந்துகவில்லை என் தாயாரும் இறந்து விட்டார்கள் 8வருடம் ஆகிறது நான் இன்று வரை என் தாயார் வீட்டில் இருந்து வருகிறேன் ஏன்னை வீட்டை விட்டு வெளியில் ஏறு ஏன்றார்கள் எனக்கு பங்கை கேட்டுகொள்கிறேன் எனக்கு சட்ட வல்லுநர்கள் உதவுமாறு இதன் மூலம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் செல் நம்பர் :9750168639 நன்றி வணக்கம்
 
21-Jun-2019 19:18:31 vijayabalan said : Report Abuse
thelivaaga kurukiren kathaliththuvittu thirumanam seithu kolvathaga kuri anudan ullasamaga erunthu vittu pin ematri vittu matroru nabarai kalyaanam seithu kondu vazh kiral oru pen aval methu entha Sattam sellumaa
 
25-Mar-2019 09:28:17 jagathesan said : Report Abuse
ஒரு மனைவி தன்னோடு கணவன் உழைப்பில் பதினைந்து ஆண்டு திருமணத்திற்கு பிறகு மேல் படிப்பு படித்துவிட்டுமூன்று வருடமாக அரசுவாலைக்கு சென்று தான் சம்பாதித்ததில் குழந்தைகளுக்கும் கணவனுக்கும் எதுவும் செய்யாமல்இருந்து வருகிறார் இதை கேக்கும்போது விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.இது குடும்ப வன்முறைக்குள் வருமா.இதற்கு தீர்வு என்ன செய்யவேண்டும்.தற்பொழுது மகன் கணவனிடம் உள்ளான்.மகள் மனைவிஇடம் உள்ளார்.இதற்கு என்ன செய்யவேண்டும்
 
21-Feb-2019 15:45:52 Adv dhass said : Report Abuse
ஏதேனும் சட்ட ரீதியான கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் send mail yesudasan99@gmail.com
 
14-Jan-2019 09:32:48 Abdulla said : Report Abuse
What is this remand case ???
 
25-Jun-2018 08:59:53 Sarumathi said : Report Abuse
ஒரு பெண் அவளா வந்து ஒரு ஆண் இடம் சண்டை போட்டு அவரை அசிங்க அசிங்கமா பேசுறா அவரை வெளக்கமர் கழி இது எல்லாம் கொண்டு வந்து உணர்ச்சியை துண்டி வீடுறாள். இது போல செய்து விட்டு அவளே கை உடைத்து கொண்டு போய் போலீஸ் இடம் என்னை அடித்தார்கள் அவதூறாக பேசுனா என்று பொய்யான புகார் குடுக்குறா.இந்த சட்டம்பொண்ணுக்கு தான் முதல் உரிமை தருகிறது ஏன்ஆணுக்கு தருவது இல்லை ???
 
22-Apr-2018 11:03:55 உமாமகேஸ்வரி said : Report Abuse
என் தோழி ஒரு பெண்ணை காதலித்த ஒரு ஆண் அவளுடைய முன்னாள் காதலனை காரணம் காட்டி அடித்தல் மிரட்டுதல் இவைகளை மேற்கொண்டால் அதற்கான தண்டனைகளும் இந்த சட்டத்தில் உள்ளடங்குமா??.. அந்த பெண்ணை (Balckmail) செய்து உடலுறவுக்கு வற்புறுத்தல் செய்கிறான்.. அந்த பெண் வேண்டாம் என்றால் அந்த பெண்ணின் பெற்றோர்களை அவமானப்படுத்த என வேண்டுமானாலும் செய்வேன் என்கிறான் அந்த பெண்ணிடம். இப்பொது அந்த பெண் என்ன செய்ய வேண்டும்.. அந்த பெண்ணிற்கு இந்த சட்டம் உதவுமா???????
 
14-Apr-2018 04:51:07 பவுன்குமார் said : Report Abuse
சார் நான் tamila சட்டம் புத்தகம் படிக்கணும் அதற்கு உண்டான புத்தகம் டவுன்லோட் செய்ய அந்த வெப்சைட்டில் டவுன்லோட் செய்யணும் ப்ளீஸ் டெல் sir
 
20-Dec-2017 08:12:31 கதிரவன்.R said : Report Abuse
வணக்கம் அம்மா நான் திருமணம் செய்து ௬ மத காலத்தில் என் மனைவின் பெற்றோர்களால் எனக்கு அதிகமாக கருர்த்து வேறுபாடுகள் உள்ளன நான் கண்ணாடி அனைத்து இருப்பதால் என்னை குருடன் என்று என்னை அவமதிப்பதை என் மனைவியும் ஏற்றுக்கொண்டு அவளின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டால் யூதனால் நான் அழைத்தும் அவள் வர மறுக்கிறாள் எனக்கு என செய்வது என்று தெரியவில்லை அதிகம் பேசினால் வரதட்சணை காஸ் குடுப்பதாக மிரட்டுகிறாள்
 
23-Nov-2017 09:17:11 aathisuresh said : Report Abuse
Kulainthagal anathaiya ka viitu sellum பெற்றோர்கள் மீது பாயும் சட்டம் எதாவது இறுக்க?
 
16-Nov-2017 14:17:42 மோகன் Rajan said : Report Abuse
குடும்ப வன்முறையால் பெண்களுக்கு மட்டும் பாதிக்கப்படுவதாக கூறுவது மிகவும் தவறு ஆண்கள் பாதிக்கப்படுவது பற்றி சட்டம் என்ன குறுக்கின்றது அதற்கான விளக்கம் தமிழ் ல தேவையாக உள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.