LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாஸ்டேக் ஆண்டு சந்தா அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கடந்த 2019-ல் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாகக் கடந்த 2021-ம் ஆண்டில் இது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது குறைந்துள்ளது. ஊழியர்களிடம் தகராறு, சில்லறை பிரச்சினை போன்றவற்றுக்கும் தீர்வு காணப்பட்டது.

இந்நிலையில், சுங்கச் சாவடிகளில் பயணத்தை எளிமைப்படுத்தவும், மலிவு கட்டணத்தில் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லவும் பாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம் செய்யப்படும் என்று மத்தியச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இதையடுத்து, வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று பாஸ்டேக் ஆண்டு சந்தா (பாஸ்) அறிமுகமாகிறது. ஒருமுறை ரூ.3,000 செலுத்தி ஆண்டு சந்தா பெற வேண்டும். இந்தச் சந்தா முறையில் சேர்ந்தால் 200 முறை சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லலாம். அல்லது ஓராண்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஆண்டு சந்தா பெறுவதற்காக ‘ராஜ்மார்க் யாத்ரா’ செயலி அல்லது NHAI/MoRTH என்ற இணையதளத்தில், வாகனத்தின் எண், பாஸ்டேக் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் யுபிஐ பயன்படுத்தி ரூ.3,000 செலுத்தினால், ஆண்டு சந்தா உங்கள் பாஸ்டேக்குடன் இணைக்கப்பட்டுவிடும். அதை உறுதி செய்வதற்கான குறுஞ்செய்தி அலைப்பேசி எண்ணுக்கு வரும்.

ஆண்டு சந்தா முடிந்துவிட்டால், தானாகவே மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாது. மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். வாகனம், ஜீப், கூடுந்து வைத்திருப்பவர்கள், அடிக்கடி சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்பவர்களுக்கு ஆண்டு சந்தா பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

by hemavathi   on 12 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
வின்பாஸ்ட் மின்கல வாகன விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் வின்பாஸ்ட் மின்கல வாகன விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.