|
|||||
சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் |
|||||
![]() காவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமைகளை மீட்டெடுக்கவும், காவிரி பிரச்சனையில், மத்திய அரசு தனது சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசு பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும், மாநில அரசும் முழு அளவில் உதவி விவசாயிகளை காப்பற்ற வேண்டும் என வலியுரித்தியும்..... காவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமையை மீட்டெடுக்கவும், காவிரி பிரச்சனையில், மத்திய அரசு தனது சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசு பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும், மாநில அரசும் முழு அளவில் உதவி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியும்.....
காவிரி நம் பிறப்புரிமை! காவிரி நீர் நம் வாழ்வுரிமை! காவிரி நதி நம் ஆயிரமாயிரம் ஆண்டு காலாச்சாரம்! காவிரி நதி நம் தாய்! காவிரியின் தொன்மை, உரிமைகளை மீட்க தமிழகத்தை காப்பாற்றிட கட்சி, ஜாதி, மதம் இவைகளை கடந்து தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தும் நோக்குடன், முதல்கட்ட மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ளது. இதில் உழவர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறோம்...
நாள் :௦08.01.2013 செவ்வாய் கிழமை நேரம் :காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை இடம் :அரசு விருந்தினர் இல்லம் அருகில், சேப்பாக்கம், சென்னை
நிகழ்ச்சி நிரல்
தலைமை : திரு. மு. சேரன், தலைவர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, டெல்டா மாவட்டங்கள். முன்னிலை :
வரவேற்புரை : திரு. வெ. சத்தியனாராயணன், பொதுச்செயலாளர், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம் துவக்கி வைத்தல்: இயற்கை விஞ்ஞானி முனைவர். கோ.நம்மாழ்வார் நிறைவு செய்தல் : தலைவர், இந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை விளக்கவுரை: திரு.ஆருபாதி ப. கல்யாணம், பொதுச்செயலாளர்,விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, டெல்டா மாவட்டங்கள் ================= கோரிக்கைகள்: 1. தற்போது தமிழகத்தில் காவிரி பாசன பகுதிகளில் 2 1/2 கோடி மக்களின் வாழ்வாதாரமாகவும், வடக்கே சென்னை மாநகர், தெற்கே இராமநாதபுரம் வரை சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழும் காவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமைகள் முழவதும் மீட்டெடுக்கப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் 2007 இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பாதகமான அம்சங்கள், அநீதிகள் போக்கப்பட வேண்டும். 2. மேட்டூர் அணைக்கு கடந்த 1970 வரை சராசரியாக கிடைத்த 378 டி.எம்.சி. நீர், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு 1991ல் 205 டி,.எம்.சி. நீர் என குறைந்து, இறுதி தீர்ப்பு 2007 ல் 192 டி.எம்.சி. என மேலும் குறைக்கப்பட்டு தமிழகத்திற்கு பாதகமும், அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை காத்திட மேட்டூருக்கு நீண்டகால சராசரி நீர் வரத்து அடிப்படையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 325 டி.எம்.சி. நீர் உறுதி செய்யப்படவேண்டும். இதற்க்காக தமிழக அரசு தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தவேண்டும். தமிழகம் பாலைவனம் ஆகாமல் காப்பாற்றப்பட வேண்டும். 3. இந்திய கூட்டாட்சியை தகர்க்கும் வகையில் தனி நாடு போல் செயல்படும் கர்நாடகத்தின் அநீதிகளுக்கு இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு கர்நாடக காவிரி அணைகளை தன் பொறுப்பில் ஏற்று சுய அதிகாரம் உள்ள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வைத்து, நானுவத்தின் பாதுகாப்புடன் தமிழகத்திருக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். 4. வறட்சியின் பிடியில் தவிக்கும், தமிழக காவிரி பாசன மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தரும் சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும. தமிழக அரசும், முழு அளவில் உதவி கூடுதல் நிதி ஒதுக்கி பரிதவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். சென்னை தொடர்பாளர்: சமூக ஆர்வலர் திரு. செந்தில் ஆறுமுகம், செல் 9791050513, kgsenthil@gmail.com |
|||||
by Swathi on 25 Jan 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|