LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வெற்றிகரமாக நிறைவுற்ற பேரவையின் வெள்ளி விழா!

கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக வட அமெரிக்காவில் இருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய் ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் வெள்ளி விழா, மேரிலாந்து மாகாணத்தில் இருக்கிற பால்டிமோர் நகரில் 2012 ஜூலை 5ஆம் நாள் துவக்கம் ஏழாம் நாள் வரை வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட்து. இவ்விழாவில் கிட்டத்தட்ட 2400 பேர் வரையிலான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
பேரவையானது, தான் நடத்தும் ஒவ்வோர் அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவையும் தமிழறிஞர்களுக்குச் சிறப்புச் செய்யும் விதமாய் அவர்தம் நினைவாக விழாவைக் கொண்டாடி வருகிறது. அவ்வரிசையில், 2012ஆம் ஆண்டுத் திருவிழா மற்றும் பேரவை வெள்ளி விழாவினை முனைவர் மு.வரதராசனார் ஆண்டு விழாவாக அறிவித்துச் சிறப்பித்தது. இத்தகைய விழாவின் இயன்மொழியாக, “தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் வாசகம் கடைபிடிக்கப்பட்டது.
வெள்ளிவிழாவின் ஓர் அங்கமாகத் தமிழிசை விழா இடம் பெற்றது. அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழிசை விழாக் கொண்டாடுவது இதுவே முதன்முறையாகும். ஜூலை மாதம் ஐந்தாம் நாள் மாலையில், தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் ஆகியோர் முன்னிலை வகிக்க, இவ்விழா மூன்று மணி நேரத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
அன்று மாலை, கொடையாளர்களும் வெள்ளி விழா விருந்தினர்களும் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியில், தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன், முனைவர் கலை.செழியன், நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், திரைப்படக் கலைஞர்கள் பரத், அமலாபால், ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ நாட்டிய நாடக்க்குழுவைச் சார்ந்த இயக்குநர் ஸ்ரீராம் சர்மா மற்றும் மணிமேகலை சர்மா, சின்னதிரைக் கலைஞர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் அறிமுகவுரை ஆற்றினர்.
விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி, 2012 ஜூலை மாதம் 6ஆந் தேதி காலை 8 மணிக்குத் துவங்கியது. மங்கல இசை, அமெரிக்க நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, குத்துவிளக்கேற்றுதல் ஆகியவற்றுக்குப் பின்னர், பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர் திரு.பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினர்.
வரவேற்புரையைத் தொடர்ந்து, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், பனைநிலத் தமிழ்ச்சங்கம், சார்லட் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவற்றுக்கிடையே, முனைவர் மு.வரதராசனார் அவர்களைப் பற்றி தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் நிழல்படங்களுடன் நினைவுகூர்ந்து விரித்துரைத்தார். பினாங்கு துணைமுதல்வர் இராமசாமி பழனிச்சாமி அவர்கள் தமிழர்தம் உரிமைகள் என்பது குறித்து உரையாற்றினார்.
தொடர்ந்து பகடிக்கலைஞர் மதுரை முத்து நிகழ்ச்சி, அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் வீணையிசை, எழுபது கவனகர் கலை.செழியனின் கவனக நிகழ்ச்சி, நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார நாடகம், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நடத்திய, “இதயங்கள் இயங்கட்டும்” எனும் தலைப்பில் கவியரங்கம் ஆகியன இடம் பெற்றன. கனடியத் தமிழர் பேரவையின் நாட்டியம் வந்திருந்தோரை வெகுவாக ஈர்த்தது.
தமிழ் நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ, வாழும்கலைப் பயிற்சி நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி ஆகியோரது உரை வீச்சும் விழாவில் இடம் பெற்றிருந்தன.
கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் அவர்களது தமிழிசையில் அரங்கம் திளைத்தது எனச் சொல்வது மிகையாகாது. முதல்நாள் நிகழ்ச்சிகளின் நிறைவாக இடம் பெற்ற‘வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகம் தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்தது.
பல்வேறு தமிழ்ச்சங்கங்களின் தமிழ்ப் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகள் பல இடம் பெற்றன. அவற்றினிடையே, தமிழ் மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள், தமிழ்ப்பன்முகத் திறன் போட்டி, நாஞ்சில் பீற்றர் அவர்களின் நெறியாள்கையில் ‘இலக்கிய விநாடி வினா’, முதன்முறையாக இடம் பெற்ற ”தமிழன் தமிழச்சி” போட்டி முதலானவை இலக்கியச் சுவையையும் கலைச்சுவையையும் வந்திருந்தோருக்கு ஊட்டியது.
கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயன் நடத்திய விவாதமேடையும் பலகுரல் நிகழ்ச்சியும் பெருத்த வரவேற்பை அவருக்குப் பெற்றுத் தந்தன. திரைப்படக் கலைஞர் பரத், அமலா பால் மேடையில் சிறப்புத் தோன்றி கலந்துரையாடினர்.
வெள்ளி விழாவினை முன்னிட்டு பேரவையின் முன்னாள் தலைவர்கள் பலருக்குச் சிறப்பளிக்கப்பட்டது. இலந்தை திரு இராமசாமி, முனைவர் சவரிமுத்து முதலானோரின் உரையோடு,  தோழர் நல்லகண்ணு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்திய ஆட்சிப் பணியாளர் சகாயம் ஆகியோரது சிறப்புரைகள் வெவ்வேறு தலைப்புகளில் இடம் பெற்றன.
விழாவினிடையே மலர் வெளியீடு, 2012-2014ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகக் குழு அறிமுகம், முக்கிய விருந்தினருக்குச் சிறப்பு, அக்சயா அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு, தொழில் முனைவோருக்கான சிறப்பு முதலானவையும் இடம் பெற்றன.
’சின்ன குயில்’ சித்ரா, பாடகி அனிதா கிருஷ்ணன் முதலானோர், ஐங்கரன் மெல்லிசை நிகழ்ச்சிக் குழுவினர் நடத்திய மெல்லிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தத்தம் பங்களிப்பை நல்கினர். வித்யா வந்தனா சகோதரிகள் பாடிய பாடல் நிகழ்ச்சியும் விழாவில் இடம் பெற்றது.
முக்கிய அரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளல்லாது, இணையரங்குகளில் நாட்டாரியல் கண்காட்சி, முன்னாள் மாணவர் சந்திப்பு, தொடர் மருத்துவக் கல்விக்கான கருத்தரங்கம், தொழில் முனைவோர் கருத்தரங்கம், ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்களின் வாழும் கலைப்பயிற்சி முகாம், அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகக் கூட்டம், திருமண தகவல் சேகரிப்பு நேரம் முதலானவையும் இடம் பெற்றன. 2013ஆம் ஆண்டுக்கான திருவிழா கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இடம் பெறுமனவும் அறிவிக்கப்பட்டது.
வெள்ளி விழா வளாகத்தில், “அமெரிக்க தமிழ்த் திருவிழாச் சந்தை” என்கிற பெயரில் வணிக வளாமும் இடம் பெற்றது. இச்சந்தையில், பூக்கடை, நகைக்கடை, துணிக்கடை, புத்தகக்கடை என அறுபதுக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகளும் சேவை நிலையங்களும் இடம் பெற்றிருந்தமை விழாவுக்கு வந்திருந்தோருக்குப் பெரும் பயனளிப்பதாக இருந்தது.
வெள்ளி விழாவுக்காக உழைத்த தன்விருப்பத் தொண்டர்கள் அனைவரும் மேடையில் ஏற்றப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டனர். இப்படியாக நிறைவுற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழாவானது, பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட ஒரு விழாவாகவும், தமிழ்க்கலை, பண்பாடு குறித்த நிகழ்ச்சிகள் செறிவாக அமைந்த ஒரு விழாவாகவும் அமைந்தது

      வெள்ளி விழாவுக்காக உழைத்த தன்விருப்பத் தொண்டர்கள் அனைவரும் மேடையில் ஏற்றப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டனர். இப்படியாக நிறைவுற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழாவானது, பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட ஒரு விழாவாகவும், தமிழ்க்கலை, பண்பாடு குறித்த நிகழ்ச்சிகள் செறிவாக அமைந்த ஒரு விழாவாகவும் அமைந்தது.

PenangDYChiefMinisterRamasamyPalanisamy
by uma   on 06 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.