ஆண்டு
|
நிகழ்வு
|
1890
|
ஆங்கிலேயர் ஆட்சியில் மைசூர் சமஸ்தானமாகவும், மெட்ராஸ் ராஜதானியாகவும் இருந்த காலத்தில், காவிரிப் பிரச்னை தலைதூக்கியது.
|
1892
|
நதிநீர் பங்கீடு குறித்து முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. சில ஆண்டுகள் கழித்து இந்த ஒப்பந்தத்தை மைசூர் சமஸ்தானம் நிராகரித்தது.
|
1910
|
கர்நாடகாவில் கண்ணம்பாடி அணை கட்ட முடிவானது. இதை தமிழகம் எதிர்த்தது. மேட்டூரில் அணை கட்ட தமிழகம் முடிவு செய்தது.
|
1924 பிப்.18
|
காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் அப்போதிருந்த சென்னை மாகாணம் மற்றும் மைசூர் அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
|
1956
|
மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு உட்பட்டிருந்த காவிரி உற்பத்தியாகும் இடமான குடகு, கர்நாடகாவுடன் இணைந்தது.
|
1974 பிப்.18
|
சென்னை மாகாணம் -மைசூர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்தானது.
|
1990 ஜூன் 2
|
காவிரி நதி நீர்ப்பங்கீடு குறித்து விசாரிக்க பிரதமர் வி.பி.சிங், சித்ததோஷ் முகர்ஜி தலைமையில் மூவர் நடுவர் நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டார்.
|
1991 ஜூன் 25
|
ஆண்டுக்கு 205 டி.எம்.சி., (1 டி.எம்.சி., = 100 கோடி கன அடி) தண்ணீர் தமிழகத்துக்குத் தரவேண்டும் என்றும், காவிரியால் பயன் பெறும் 11.2 லட்சம் ஏக்கரின்அளவை உயர்த்தக் கூடாது என்றும் கர்நாடகாவுக்கு உத்தரவு.
|
1991 டிச.11
|
நடுவர் நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்குமாறு, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை. இந்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் பலி.
|
1993 ஜூலை
|
இடைக்கால உத்தரவை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா உண்ணாவிரதம்.
|
1996 ஆக.,- 1997 ஜன.5
|
சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைப்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், கர்நாடக முதல்வர் படேலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை, தீர்வு எட்டப்படாமல் முடிந்தது.
|
1998 ஜூலை 20
|
நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் கர்நாடகா - தமிழகம் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் வாஜ்பாயிடம் மனு.
|
1998 ஜூலை 21
|
ஆக. 21க்குள் தமிழகத்துக்குச் சேர வேண்டிய 205 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
|
1998 ஆக.8
|
காவிரி பிரச்னையில் சுமூகத் தீர்வு காணாவிட்டால், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவு வாபஸ் என ஜெயலலிதா எச்சரிக்கை.
|
1999 மே 7:
|
1991-92ல் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தை மே 15க்குள் வழங்க சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவு.
|
2002 அக்
|
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்ததிற்காக கோர்ட்டில் மன்னிப்புக் கோரி, காவிரி நீரை திறந்து விட உத்தரவிட்டார்.
|
2002 அக்.12
|
காவிரியில் தண்ணீர்த் திறந்துவிடக் கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம்.
|
2003 ஜன.13
|
தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் தண்ணீர் தர கர்நாடகா ஒப்புதல்.
|
2006 ஆக.3
|
காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
|
2007 பிப்.5
|
காவிரி நடுவர் நீதிமன்றம், இறுதி தீர்ப்பை அறிவித்தது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 19.2 கோடி கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். கேரளா, புதுச்சேரிக்கு உரிய நீரையும் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தமிழகம் ஏற்றுக்கொண்டது. கர்நாடக அரசு எதிர்த்து மனுத்தாக்கல்.
|
2012, செப்.13
|
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என முதல்வர் ஷெட்டர் திடீர் அறிவிப்பு. செப்.19: காவிரியில் தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு.
|
2012, செப்.24
|
தண்ணீர் திறந்துவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு.
|
2012, செப்.28
|
தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டிப்பு.
|
2012, அக்.8:
|
தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு பிரதமர் தான் பொறுப்பு என அறிவித்தது. பிரதமர் அக்.20 வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவையும், பிரதமர் உத்தரவையும், சில மணி நேரங்களில் கர்நாடகா அவமதித்தது.
|
2012, அக்.9
|
கர்நாடகா அரசு மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. கர்நாடகாவைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கைது.
|
2012, அக்.10
|
பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச, கர்நாடக முதல்வர் ஷெட்டர் டில்லி சென்றார். இரண்டு நாட்கள் காத்திருந்து பிரதமரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
|
2012, அக்.17
|
நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனு ஒன்றை தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது.
|
2012, நவ.15
|
காவிரி நதிநீர் ஆணையம், நவ.16-30க்குள் 4.81 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டது.
|
2012, நவ.29
|
காவிரிப் பிரச்னை குறித்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருவில் பேச்சுவார்த்தை.
|
2012, டிச.6
|
தமிழகத்துக்கு உடனடியாக, 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
|
2012, டிச.7
|
நீர் திறந்து விட முடியாது என எம்.பி.,க்களுடன் பிரதமரை சந்தித்து ஷெட்டர் கூறினார். தமிழகத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.
|
2012, டிச.10
|
தமிழகத்துக்கு 12 டி.எம்.சி., நீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
|
2012, டிச.21
|
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமருக்கு ஜெ., இரண்டாவது முறையாக கடிதம்.
|
2012, டிச.25
|
அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிடக் கூடாது என பிரதமருக்கு ஷெட்டர் கடிதம்.
|
2013, ஜன.4
|
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட தாமதிக்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.
|
2013, ஜன.11
|
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமர் முடிவு.
|
2013, பிப்.4
|
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு பிப்.20க்குள் கெஜட்டில் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
|
2013, பிப்.9
|
தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு.
|
2013, பிப்.13
|
குறைந்த அளவு தண்ணீர் திறந்து விட்ட கர்நாடக அரசு மீது, தமிழகம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
|
2013, பிப்.20
|
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது.
|