LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்ததால் நிதி நெருக்கடி - 10,000 பேரைப் பணி நீக்கம் செய்த கனடா கல்வி நிறுவனங்கள்

 

கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாகக் குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் என 10,000 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளன.

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான பிரச்சினையில், இந்தியாவுக்கும்  வட அமெரிக்க நாடான கனடாவுக்கும் இடையேயான உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கனடாவில் உயர் கல்வி படிப்பதற்காக, இந்திய மாணவர்கள் அதிகளவில் சென்று வந்தனர். அந்நாட்டு அரசு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

மாணவர் விசாவுக்கான எண்ணிக்கையில் வரம்பை நிர்ணயித்தது. இந்தக் கட்டுப்பாடுகள் வெளிநாட்டு மாணவர்களை நம்பியுள்ள அந்நாட்டின் கல்லூரிகளுக்கே விளைவுகளை ஏற்படுத்தியது. கனடாவின் ஒன்டாரியோ நகரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். இந்தாண்டு விதித்த கட்டுப்பாடுகள் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்தது.

அதை ஈடுசெய்ய அரசிடம் அவசர நிதியுதவி வழங்க கல்லூரி நிர்வாகங்கள் கோரின. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதனால் பல கல்லூரிகள் துறைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. 10,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. அரசு தலையிடாவிட்டால் கல்லூரிகளில் பணி நீக்கம் அதிகரிக்கும் என ஒன்டாரியோ அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.
by hemavathi   on 13 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.