|
||||||||
(21-08-2023, 8:00PM ) மாநில ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்கு நன்றி. |
||||||||
![]() வணக்கம், அனைத்து மாவட்ட அறிமுகம் முடிந்து, நூல்களை வழங்க அடுத்தகட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் 18 மாவட்டங்கள்(புதுச்சேரி உட்பட) கலந்துகொண்டு கேள்விகள் கேட்டு தெளிவுபெற்றனர். அவர்களுக்கு உரிய அடுத்தக்கட்ட தகவல்கள் அனுப்பப்படுகிறது. மீதம் உள்ள 21 மாவட்டங்களுக்கு வரும் வெள்ளி இரவு 8 மணிக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. தவறாமல் இணையம் வழியாக கலந்துகொண்டு விவரங்களைப் பெறவும். நூல்கள் வராத மாவட்டங்களுக்கு விரைவில் இவ்வாரத்திற்குள் வந்துசேரும். கூட்டத்தில் பகிரப்பட்ட சில விவரங்கள்: 2. அனுப்பட்ட நூல்களை அப்படியே கொடுக்க வேண்டியதில்லை. மாவட்டத் தொடர்பாளராக நீங்கள் அந்தப்பள்ளியின் சூழல், மாணவர்களின் எண்ணிக்கை ஆகிய்வற்றைக் கருத்தில் கொண்டு ஒரு பள்ளிக்கு முதல்கட்டமாக அதிகப்படியாக 100 மாணவர்களுக்கு மட்டும் என்று திட்டமிடவும். இதற்கு நாம் அனுப்பவிருக்கும் படிவத்தை தலைமையாசிரியருக்கு வழங்கி ஆர்வமும் திறனும் உள்ள மாணவர்களை இனம் கண்டு, மாணவர்களின் விவரங்களைத் திரட்டச்சொல்லி, மாணவர் பெயர், நிலை, ஊர், பெற்றோர் தொழில் ஆகியவற்றை பட்டியலிட்டு அவர்களுக்கு மட்டும் நூல்கள் வழங்கவேண்டும். அவர்கள் ஆர்வத்தைப்பொறுத்து அடுத்தடுத்து அவர்களுக்குத் தேவையான நூல்களை தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கவிருக்கிறோம். அவர்கள் திருக்குறள் பயிற்சியில் ஆர்வம் காட்டுகிறார்களா அல்லது இலவசமாக நூல்கள் என்பதால் அனைவருக்கும் கொடுக்க விரும்புகிறார்களா என்று பார்த்து வழங்கவேண்டும். 3. எந்த பள்ளிகளுக்கும் நேரடியாக நூல்களை தற்போது வழங்கவேண்டாம். இந்த வாரத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியருக்கு சென்னையிலிருந்து உங்களையும் மாவட்ட திருக்குறள் தொடர்பாளராகக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தி , CEO , DEO , மாவட்ட வளர்ச்சித்துறை துணை இயக்குநர் , நூலக அலுவலர், தலைமையாசிரியர்கள் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறோம். திருக்குறள் முற்றோதல் பரிசு என்பது மாவட்ட ஆட்சியரின் கீழ் வரும் தமிழ் வளர்ச்சித்துறை திட்டம் என்பதால், அதற்கு துணைநிற்கும் நம் இலவச திருக்குறள் நூல் வழங்குதல், இலவச முற்றோதல் பயிற்சியை அவர்களே தொடங்கிவைத்து ஊக்கப்படுத்தி, பயிற்சியை எடுக்க மாணவர்களை ஊக்குவிக்க கேட்டுக்கொள்வோம். அந்தக் கடிதம் உங்களுக்கும் பகிரப்படும். அதை எடுத்துக்கொண்டு நேரில் சென்று அல்லது ஏற்கனவே தொடர்பிருந்தால் புலனத்தில் அனுப்பி திட்டத்தை விளக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைமையாசிரியர்களை அழைத்தோ அல்லது ஒரு அரசுப்பள்ளியில் சிறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோ இந்நூலை தலைமையாசிரியர்களுக்கு வழங்கி , அடுத்த ஆண்டு மேலும் பல அரசுப்பள்ளிகள் வரும் நிலையை ஏற்படுதுவோம். 4. நிகழ்ச்சியைக் குறித்து ஊடங்கங்களுக்கு முறையான தகவல்களை தெரிவித்து உங்கள் மாவட்ட தினமணி, தினமலர், தமிழ் இந்து, பிற உள்ளூர் செய்திகள் உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வந்தால் பிற அரசுப்பள்ளிகள் நம் பள்ளிக்கும் வேண்டும் என்று நெருங்கி வருவார்கள். திருக்குறள் நிகழ்ச்சிக்கு உரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தும். 5. மாணவர்கள் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க, அடையாளம் காணப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி ஏற்க வேண்டும். அது தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் படிவத்தில் இருக்கும். புதன்கிழமைக்குள் அந்தப் படிவம் உங்களுக்கு வந்துசேரும். 6. அதிகமாக வந்துள்ள நூல்களை பிரித்து எடுத்து மாவட்டத்தொடர்பாளர் வைத்துக்கொண்டு, ஆர்வமுள்ள புதிய அரசுப்பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து மாநிலக் குழுவிற்கு அனுப்பி (புலனக் குழுவில் பகிர்ந்து) ஒப்புதல் பெற்று வழங்க திட்டமிடவேண்டும். 7. திருக்குறள் நூல்களை கள அனுபவத்தின் அடிப்படையில் மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. வேறு நிலைகளுக்கு வழங்கவேண்டாம். மொத்த மாணவர்களில் 25-30 விழுக்காட்டினருக்கு மட்டுமே வழங்கலாம் . ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக 100 புத்தகங்கள் வரை மட்டுமே முதல்கட்டமாக வழங்கவிருக்கிறோம். 8. மாணவர்களின் விவரங்களை தலைமையாசிரிர்கள் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பி, பள்ளி முத்திரையுடன் கையெழுத்திட்டு பெற்றுக்கொள்ள்ளவேண்டும். 9. நூல்கள் வழங்கும்போது இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சியை வழங்க உங்கள் மாவட்டத்திற்கு என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை முடிவெடுத்து கூட்டத்தில் நூல்களோடு சேர்த்து தெரிவிக்கவேண்டும். எனவே , உங்கள் மாவட்டத்தில் இதுவரை 1330 திருக்குறள் சொல்லி அரசிடம் அல்லது வேறு அமைப்புகளில் பரிசு பெற்றவர்களின் விவரங்களை உங்களுக்குத் தெரிவிக்கலாம். நாங்களும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேடிவருகிறோம். நேரடி பயிற்சியாளர் கிடைக்காத மாவட்டங்களுக்கு எங்கள் முற்றோதல் தலைமைப் பயிற்சியாளர்கள் வாரம் இருமுறை நேரலை வழியாகவும் , அதிக மாணவர்கள் சேரும் நிலையில் , எவரும் எளிதாக பயிற்சியைப் பெற தொழில்நுட்பம் கொண்டு www.ValaiTamil.TV வழியாகவும் பயிற்சியை வழங்கவிருக்கிறோம். பயிற்சியாளரை உங்கள் மாவட்டத்தில் அடையாளம் காணும்வரை, உருவாக்கும்வரை இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
நன்றி, |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 22 Aug 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|