|
|||||
செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரான நாவாய் படத்தின் முதல் பார்வை வெளியீடு |
|||||
![]() தூத்துக்குடியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாவாய் என்ற புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. அரன் நிறுவனம் தயாரிக்க, பார்க்கவன் சோழன் இயக்குகிறார். வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இப்படம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். கதாபாத்திரங்களின் உருவாக்கம், காலப்பிரதேச அமைப்புகள், பழங்காலச் சூழ்நிலை கட்டமைப்புகள் என அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கி, வரலாற்றுத் தகவல்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டியை மதுரை ஆதினம் வெளியிட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாவாய் என்ற புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. அரன் நிறுவனம் தயாரிக்க, பார்க்கவன் சோழன் இயக்குகிறார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இப்படம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். கதாபாத்திரங்களின் உருவாக்கம், காலப்பிரதேச அமைப்புகள், பழங்காலச் சூழ்நிலை கட்டமைப்புகள் என அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கி, வரலாற்றுத் தகவல்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டியை மதுரை ஆதினம் வெளியிட்டார். |
|||||
by hemavathi on 30 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|