LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

முதல் கதை

முதல் கதை ஒரு வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கி றது- ஒரு சைக்கிள் விபத்து.

அப்போது நான் ஒரு விளையாட்டுப் பொருட்களின் ஏஜென்டாக இருந்தேன். கம்பெனி சியால்கோட்டில் இருந்தது. ஒன்பது பத்து வருடங்கள் இந்தியா முழுக்கப் பயணம் செய்து முடித்துவிட்டு வந்திருந்தேன். பயணம் அகில இந்தியாவில் மட்டுமல்ல. கப்பலில் ஒரு கலாஸியாக அரேபியா வில் இருக்கும் ஜித்தா வரை சென்றேன். விளையாட்டுப் பொருட் களின் ஏஜென்டாக எர்ணாகுளத்திற்கு வந்திருந்தேன். ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அன்று நான் ஒரு நாகரீக மனிதனாக இருந்தேன். சுருள் முடி, தொப்பி, டை, கோட்டு, ட்ரவுசர், சாக்ஸ், ஷூ.

அந்தக் காலத்தில் எர்ணாகுளத்தில் ஒரு சாப்பாட்டுக்கு ஒரு அணா விலை. அதாவது- ஆறு பைசா. தேநீருக்கு காலணா. கால் ரூபாய் இருந்தால் ஒரு நாள் பரம சுகத்துடன் இருக்கலாம். பெரிய கம்பீரமான ஹோட்டல்களில் ஒரு சாப்பாட்டுக்கு இரண்டணா விலை. ஹாஸ்டலில் தங்கினேன். சாப்பாடும் தேநீரும் ஹோட்டல் களில்.



ஒரு நாள் மதிய நேரம் நான் சைக்கிளில் வந்து கொண்டிருந் தேன். விளையாட்டுப் பொருட்கள் இருந்த தோல் பையை சைக்கிளின் விளக்கு காலில் தொங்க விட்டிருந்தேன். இடம்- சண்முகம் சாலை. அங்கு சிறிய இறக்கம் இருக்கும். இறக்கத்தில் இறங்கி வேகமாக சைக்கிளில் செல்கிறேன். அந்தச் சமயத்தில் பெட்டியின் கைப்பிடி விலகிவிட்டது. பெட்டி சைக்கிளின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. நான் ஒரு மூட்டையைப் போல சிதறி விழுந்தேன்.

அந்தக் கோலத்தில் ஹாஸ்டலில் கிடக்கிறேன். நடக்க மிகவும் சிரமம். முழங்காலிலும் கையிலும் தோல் நிறைய போய்விட்டது. சில நாட்கள் படுத்திருந்தேன். கையிலிருந்த காசெல்லாம் செலவாகிவிட்டது. சாம்பிளாகக் கிடைத்திருந்த விளையாட்டுப் பொருட்களை விற்று சாப்பிட்டாகிவிட்டது. தொப்பியையும் டையையும் கோட்டையும் மாற்றிவிட்டேன். ட்ரவுசருக்கு வெளியே சட்டை வந்தது. அப்படியே நடப்பேன். ஒரு வேலையும் இல்லை. கையில் காசும் இல்லை. வைக்கம் தலயோலப்பறம்பில் இருந்த வீட்டில் மிகவும் கஷ்ட நிலை. வாப்பாவிற்கு மர வியாபாரம். அது நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்தது. வீடும் நிலங்களும் அடமானத்தில் இருந்தன. இரண்டு சகோதரிமார்கள் திருமண வயதை அடைந்திருந்தார்கள். மூன்று சகோதரர்கள் இருந்ததில் யாருக்கும் குறிப்பிட்டுக் கூறுகிற வகையில் வேலை எதுவும் இல்லை. எனக்கு அடுத்த தம்பி அப்துல் காதர் பள்ளிக்கூடத்தில் மலையாள ஆசிரியராக இருந்தான். பாதி சம்பளம்தான் கிடைக்கும். (குடும்பத்தைப் பற்றிப் பிற்காலத்தில் "பாத்தும்மாவின் ஆடு' என்ற நூலில் கூறியிருக்கிறேன்).

நான் ஒரு வழியும் இல்லாமல் எர்ணாகுளத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். என்ன செய்வது? அடுத்த ப்ரோக்ராம் என்ன? முன்பு பயணத்திற்கு முன்னால் அரசியல் தொண்டனாக இருந்தேன். சிறையில் இருந்திருக்கிறேன். அதற்குப் பிறகு பத்திரிகையாளனாக இருந்தேன். தீவிர அமைப்பைச் சேர்ந்த வனாகவும். அப்படித்தான் நாடு முழுக்கப் பயணம் செய்தேன். நான் சிந்தித்தேன். அரசியல்வாதியாக ஆக வேண்டாம். இலக்கிய வாதியாக ஆகலாம். ஒரு முடிவுக்கு வந்தேன். இலக்கியத்தில் கவிதையா, உரைநடையா? கவிதைகள் எழுத வேண்டுமா, கதைகள் எழுத வேண்டுமா? இரண்டும் தெரியாது. மொழியும் சிரமமாக இருந்தது. எழுத்துக்கள் அனைத்தும் சரிவரத் தெரியாது. எனினும், உரைநடை எழுதலாம். எவ்வளவோ வாழ்க்கை அனுபவங்கள் இருக்கின்றன. அப்போது அது எதைப் பற்றியும் நினைக்கவில்லை. எப்படியிருந்தாலும் எழுத்தாளனாக ஆவது என்பதில் உறுதியாக இருந்தேன். எதை எழுதுவது? ஒரு வடிவமும் கிடைக்கவில்லை.

முதலில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று பார்ப்போம். அந்த நோக்கத்துடன் வெளியேறி சுற்றினேன். எவ்வளவோ நடந்தேன். பல கடைகளிலும் பார்த்தேன். நடந்து களைத்துப் போய் அப்படி வரும்போது- ஜெயகேசரி!

ஒரு பத்திரிகை அலுவலகம். அங்கு நுழைந்தேன். வெளுத்த பிரகாசமாக முகத்தைக் கொண்ட ஒரு மனிதர் மேஜைக்கு அருகில் அமர்ந்து ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்:

""உட்காருங்க சார்.''

நான் நாற்காலியில் உட்கார்ந்தேன். விவரத்தைச் சொன்னேன். அவர் சிரித்தார். அவர் சொன்னார்:

""பத்திரிகை ஆசிரியர், ப்ரூஃப் ரீடர், எழுத்தாளன் எல்லாமே நான்தான். பேப்பர் வாங்கிக்கொண்டு வருவதும் நான்தான். நான் பத்திரிகை எடுத்துக்கொண்டு போய் விற்பது இல்லை என்பதொன்றுதான் பாக்கி. வேலை தருவதற்கு வாய்ப்பில்லை. ஏதாவது எழுதிக்கொண்டு வந்தால், நான் பிரசுரிக்கிறேன்.''

""என்ன எழுதணும்? கதையா, கவிதையா?''

""எதை வேணும்னாலும் எழுதுங்கோ.''

""சரி...''

நான் போய் ஒரு கதையை எழுதிக் கொண்டு வந்து கொடுத் தேன். அவர் அதை ஜெயகேசரியில் பிரசுரம் செய்தார். ஜெயகேசரி வார இதழாக வந்து கொண்டிருந்தது. விலை கால் அணா என்று நினைக்கிறேன். பத்திரிகை ஆசிரியர் பத்மனாப பை. நான் மூன்று கதைகளை ஜெயகேசரியில் எழுதினேன். சாப்பாடும் தேநீரும் சற்று முன்னாலிருந்த சிறிய ஹோட்டலில். அங்கு தரவேண்டிய பணம் அதிகம் ஆனபோது, பத்திரிகை ஆசிரியர் எனக்கு பதினோரு அணா கொடுத்தார். கிட்டத்தட்ட முக்கால் ரூபாயை நெருங்கி வரும். அதை ஹோட்டலில் கொடுத்தேன். அந்தப் பதினோரு அணாதான் முதல் சன்மானம். (பிற்காலத்தில் ஒரு சிறுகதைக்கு நூற்றைம்பதிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை சன்மானம் கிடைத்திருக்கிறது). அந்தப் பதினோரு அணா பெரிய விஷயமாகத் தோன்றியது. பெரும்பாலான நேரமும் பத்திரிகை அலுவலகத்தில்தான். நான் ப்ரூஃபையும் பார்த்துக்கொண்டிருந் தேன். நாங்கள் மிகவும் நெருக்கமானோம். நான் சொன்னேன்:

""என் மொழி மிகவும் மோசமாக இருக்கும். ஒன்பது பத்து வருடங்களில் மலையாளத்தை மறந்து விட்ட மாதிரிதான். ஆங்கிலத்தையும் இந்துஸ்தானியையும்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். சிந்திப்பதுகூட அந்த மொழிகளில்தான். மலையாளத்தைச் சரி பண்ண என்ன வழி?''

அவர் சொன்னார்:

""மொழியைச் சரி பண்ண மலையாளப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை என்றொருவர் "ரமணன்' என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதை வாசித்தால் புதிய சொற்கள் கிடைக்கும். கிருஷ்ணபிள்ளையின் இரண்டு நண்பர்கள் தான் அதை பிரசுரம் செய்திருக்கிறார்கள். எ.கெ. ஹமீதும் சி.கெ. பாவாவும். எ.கெ. ஹமீத் ஒரு கவிஞர். சி.கெ. பாவா ஒரு பத்திரிகை யாளர். எ.கெ. ஹமீதிற்கு துணி வியாபாரம். சி.கெ. பாவாவிற்கு ஒரு இரும்புக்கடை இருந்தது. அவர்கள் ஆயிரம் பிரதிகளை அச்சடித்தார்கள். சங்ஙம்புழ 250 பிரதிகளைக் கொண்டு போனார். அந்த புத்தகம் விற்பனை ஆகவேயில்லை. கட்டிக் கிடக்கிறது. ஒரு புத்தகம் கிடைக்குமா என்று பாருங்கள்.''

நான் சி.கெ. பாவாவின் இரும்புக்கடைக்குச் சென்றேன். அங்கு "ரமணன்' கட்டப்பட்டுக் கிடக்கிறது. சி.கெ. பாவா எனக்கு ஒரு புத்தகத்தைத் தந்தார். நான் அதை வாசித்தேன். எனக்குப் புதிய சொற்கள் எதுவும் கிடைக்கவில்லை. "ரமணன்' ஒரு பிரதிக்கு காலணா என்று கணக்குப் போட்டு விற்றார்கள் என்றோ, மொத்த பிரதிகளையும் எடை போட்டு பேப்பர் விலைக்கு விற்றார்கள் என்றோ கேள்விப்பட்டிருக்கிறேன். (அந்த "ரமண' னின் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் பின்னர் விற்பனை ஆயின.) பத்திரிகை ஆசிரியர் பல நேரங்களிலும் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு தந்திருக்கிறார்.

சாதாரணமாக நான் எழுதும்போது எழுதப்போகும் விஷயம் தெளிவாக என்னுடைய மனதில் இருக்கும். ஆனால், முதல் கதையை எழுதியபோது இதயம் பங்கு சேரவில்லை. முதல் கதை "என்னுடைய தங்கம்' என்ற பெயரில் வந்தது. பின்னர் அதை

நூலில் சேர்த்தபோது "தங்கம்' என்று மட்டுமாக ஆக்கினேன். அதை எழுதியது ஒரு ஆச்சரியமான விஷயம். பத்திரிகை ஆசிரியர் கதையோ, கவிதையோ எழுதிக் கொடுக்கும்படி சொன்னபோது நான் நேராக ஹாஸ்டலுக்குச் சென்றேன். மனதில் எதுவும் இல்லை. ஹாஸ்டலுக்குச் சென்று வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். முன் பக்கமிருந்த சாலையின் அருகில் குழாய் இருந்தது. நீர் கொண்டு செல்வதற்காகக் கொஞ்சம் இளம் பெண்கள் குழாயைச் சுற்றி நின்றிருந்தனர். இளம் பெண்கள் அனைவரும் ஹாஸ்டல் மாணவர்களின் காதலிகள். அதாவது- மாணவர்கள் எல்லாரும் ஒவ்வொருவரையும் காதலியாக ஆக்கியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் யாருக்கும் தேவைப்படாத ஒரு கறுத்த பெண் இருந்தாள். அவளை நான் எடுத்துக் கொண்டேன். அவளைப் பற்றி ஒரு கதை தோன்றியது.

அதுதான் என்னுடைய தங்கம்...!

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.