மாணவப்பருவத்திலேயே தனிமனித ஒழுக்கம், தலைமைப்பண்பு , அறச்சிந்தனை முதலியனவற்றை வளர்த்தெடுக்கும் பொருட்டும், இளம் பருவத்தில் தன் உழைப்பைச் செலுத்தி, திருக்குறளை முழுமையாகக் கற்றுத்தேர்ந்து, அரசு நடத்தும் 1330 குறள்களையும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் போட்டியில் கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை பெறவும் வழிகாட்ட, ஊக்கப்படுத்த எடுக்கப்படும் சிறு முயற்சி இது.
திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும் என்ற நோக்கில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் இலவசமாக 1330 திருக்குறள் மனனப் பயிற்சி அளிப்பது என்னும் முன்னெடுப்பு மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே திருக்குறள் முற்றோதல் கற்றுக்கொடுத்து மாணவர்களை உருவாக்கிய கவனகர்கள் , கற்றுக்கொடுக்கும் உத்திகள் தெரிந்த திருக்குறள் ஆளுமைகள் ஆறுபேர் முதல்கட்டமாக கைகோர்த்து இப்பயிற்சியை வழங்கவிருக்கின்றனர்.இதன் தொடக்கமாக மாவட்டத்திற்கு 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முற்றோதல் பயிற்சி தொடங்கப்படவிருக்கிறது.
தனியார் பள்ளி மாணவர்களும் , வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்களும் திருக்குறள் ஆளுமைகளை/பயிற்சியாளர்களை பயன்படுத்தி திருக்குறள் முற்றோதல் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகிறோம்.
|