|
||||||||
ஸ்டஃப்டு வெண்டைக்காய்(Stuffed Ladies Finger) |
||||||||
தேவையானவை : பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 1, தக்காளி - 1, சோம்பு - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் - சிறிது, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிது. தனியா - 1 டேபிள் ஸ்பூன், மிளகு 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள், மிளகாய் தூள், செய்முறை : 1.வெண்டைக்காயின் இரு முனையையும் நறுக்கி விட்டு, இரண்டாகக் கீறி வைத்துக் கொள்ளவும். மிளகு,சோம்பு, தனியா, சீரகத்தை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் மற்ற பொடிகளையும், உப்பையும் கலந்து கொள்ளவும். கீறி வைத்துள்ள வெண்டைக்காய்க்குள் கலந்து வைத்துள்ள பொடியை அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சிறிது சீரகம் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். 2.மிகவும் பொன்னிறமாகும் வரை விடாமல், வெண்டைக்காய்களைப் போட்டு, தேவைப்பட்டால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து, ஒரு தட்டு போட்டு மூடி வேக விடவும்.சாதத்துக்கு என்றால் நன்றாக ரோஸ்ட் செய்து பரிமாறலாம்.சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள மெத்தென்று எடுக்கவும். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|