|
||||||||
ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு(Stuffed Potato) |
||||||||
தேவையானவை : உருளைக்கிழங்கு - கால் கிலோ சர்க்கரை - 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன் பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1 டீஸ்பூன் தனியாதூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: 1.நன்கு கழுவிய உருளைக்கிழங்குகளை மேல் தோலை சீவி எடுக்கவும். உருளைக்கிழங்கை மேலிருந்து கீழ்வரை, கத்தியால் நறுக்கவும். கிழங்குகளை "அவன்"-ல் வைத்து, "மைக்ரோ அவனில் 5 நிமிடம் வேகவைக்கவும். 2.தேங்காய் துருவல்,சீரகத்தூள், தனியாதூள், பெருங்காயம், உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் இவற்றை சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு உருளைக்கிழங்குகளை ஒவ்வொன்றாக எடுத்து, கலவையை ஒரு டேபிள்ஸ்பூன் அடைத்து, ஒரு மைக்ரோ, வேவ் கண்ணாடி பாத்திரத்தில் வரிசையாக வைக்கவும். இதன் மேல், மீதமுள்ள பொடியை தூவி, 2 டீஸ்பூன் எண்ணெய் தெளித்து, 5-லிருந்து 7 நிமிடங்கள் மைக்ரோ அவனில் வைக்கவும். சுவையான ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ரெடி! |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|