|
||||||||
அமீரகத்தில் அரசு மானியம் ரத்தானதால் எரிபொருள் விலை உயர்வு |
||||||||
![]()
அமீரக எரிசக்தி அமைச்சகத்தின் எரிபொருள் வேலைக்குழுவுக்கான குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தி...
"அமீரகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்காக அரசு வழங்கி வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேசச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அமீரக எரிசக்தி அமைச்சகம், அமீரக எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் பேசி இந்த விலை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த மாதத்திற்கான விலை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் சூப்பர் 98 ரகப் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.58 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.57 திர்ஹாமாக இருந்தது. இதில் கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது.
ஸ்பெஷல் 95 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.47 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.46 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.46 திர்ஹாமாக இருந்தது. இதில் 1 பில்ஸ் விலை அதிகரித்துள்ளது.
இ-பிளஸ் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.38 திர்ஹாமில் இருந்து 2.39 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. இந்த ரகப் பெட்ரோலின் விலை கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது. அதேபோல் டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த விலையில் 11 பில்ஸ் குறைக்கப்பட்டு நடப்பு மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.52 திர்ஹாம் ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த புதிய விலைகள் அனைத்தும் 5 சதவீத வாட் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த வரி உட்பட அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும். இந்த புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
|
||||||||
by hemavathi on 01 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|