LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பொங்கல் ரிலீசில் புதிதாக இணைந்துள்ள பேய் படம் !!

கடந்த மாதம் வரை ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, காக்கிசட்டை, கொம்பன் ஆகிய ஐந்து திரைப்படங்கள் பொங்கல் ரிலீசாக வெளியாவதாக இருந்தது. இதில் ஐ மற்றும் என்னை அறிந்தால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், அந்த படத்தை வெளியிடவும் ஏராளமான திரையரங்குகள் தயாராக இருந்தன.

மேலும் இவ்விரு படங்களும் பொங்கலுக்கு வெளியாகுமேயானால் மற்றப் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என்பதால் ‘காக்கி சட்டை’ மற்றும் ‘கொம்பன்’ ஆகிய படங்கள் பொங்கல் ரிலீசில் இருந்து பின் வாங்கின.

இதனிடையே பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் ரிலீஸ் திடீரென ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ‘ஐ’, ‘ஆம்பள’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது பொங்கல் ரிலீசில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படம் புதிதாக இணைந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் 15ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டார்லிங் படத்தை சாம் ஆன்டன் இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

by Swathi   on 06 Jan 2015  0 Comments
Tags: 2015 Pongal Race   Darling   G V Prakash darling Movie   டார்லிங்   பொங்கல் ரிலீஸ்        
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் உருவாகிறதாம் டார்லிங் 2 !! விரைவில் உருவாகிறதாம் டார்லிங் 2 !!
கூடுது மவுசு... டார்லிங் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு !! கூடுது மவுசு... டார்லிங் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு !!
பொங்கல் ரிலீசில் புதிதாக இணைந்துள்ள பேய் படம் !! பொங்கல் ரிலீசில் புதிதாக இணைந்துள்ள பேய் படம் !!
பொங்கல் ரேஸில் பின்வாங்கப் போகும் படங்கள் !! பொங்கல் ரேஸில் பின்வாங்கப் போகும் படங்கள் !!
பொங்கல் ரிலீசில் 5 படங்கள் !! பின்வாங்கப் போவது யார் !! வெற்றி பெறப்போவது யார் !! பொங்கல் ரிலீசில் 5 படங்கள் !! பின்வாங்கப் போவது யார் !! வெற்றி பெறப்போவது யார் !!
பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் !! பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் !!
பொங்கல் ரேஸில் மூன்று படங்கள் - யார் யாருக்கு எவ்வளவு தியேட்டர் !! பொங்கல் ரேஸில் மூன்று படங்கள் - யார் யாருக்கு எவ்வளவு தியேட்டர் !!
சிரிப்பு படத்திற்கு சீரியஸாக உழைக்கும் ஜி.வி !! சிரிப்பு படத்திற்கு சீரியஸாக உழைக்கும் ஜி.வி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.