வாகை சூடவா, நையாண்டி, குட்டி புலி, அமர காவியம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர் ஜிப்ரான். இவரது இசைக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது.
இவர் தற்போது, விஸ்வரூபம் 2, ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’ போன்ற படங்களுக்கு இசை அமைக்க உள்ளார்.
இந்நிலையில் தன் ரசிகர்களுடன் இணையதளத்தில் பேசிய ஜிப்ரான், ரசிகர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அப்போது விஜய், அஜீத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேட்டதற்கு, துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய ‘ஐ அம் வெயிட்டிங்’ என்று பதிலளித்தார். மேலும் நான் இருவரின் ரசிகன், அவர்களுக்கு இசையமைப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
|