LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

மட்டன் பிரியாணி (Mutton Biryani)

தேவையானவை :


அரிசி -   1 கிலோ

மட்டன்  -   1 கிலோ

இஞ்சி  -  100 கிராம்

ஏலக்காய்   -   10

மிளகாய் தூள்     -   1 1/2 ஸ்பூன்

மல்லித்தூள்        -   2 ஸ்பூன்

தயிர்                  -   250 கிராம்

பூண்டு            -   100 கிராம்

தக்காளி-  1/4 கிலோ

வொங்காயம்        -  1/4 கிலோ

பச்சைமிளகாய் -  10

பட்டை -   10

லவங்கம்         -   10

நெய்-      50 கிராம் 

உப்பு  -     தேவைக்கு ஏற்ப

கேசரிப்பவுடர்      -  தேவைக்கு ஏற்ப

எலும்மிச்சை       - 1

புதினா              -   அரை  கட்டு

கொத்தமல்லி      -  அரை   கட்டு

எண்ணெய்        -   50 கிராம் 



அரைக்க வேண்டியவை;-


இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்.

பட்டை- 5,

லவங்கம்- 5,

ஏலக்காய்- 5,

மிளகாய்த்தூள்,

மல்லித்தூள்

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்


செய்முறை;-


1.ஒரு வாணலியில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். ஐந்து நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.


2.கலவையுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.முக்கால் பாகம்  வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.


3.ஐந்து நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இப்படி செய்யும் போது அடுப்பை மீதமன் தீயில் வைக்க வேண்டும்.கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

Mutton Briyani

Ingredients for Mutton Briyani:

  

Rice-1 Kg

Mutton-1 Kg

Ginger-100 G

Cardamom-10

Chilly Powder-1 1/2 Tsp

Coriander Powder-2 Tsp

Curd-250 G

Garlic-100 G

Tomato-100 G

Onion-1/4 Kg

Green Chilly-10

Cinnamon-10

Cloves-10

Ghee-50 G

Salt-as Needed

Kesari Powder-as Needed

Lemon-1

Mint-1/2 Bunch

Coriander-1/2 Bunch

Oil-50 G

 

Ingredients for Grinding:

 

Ginger, Garlic Paste-1 Tsp,

Cinnamon-5,

Cloves-5,

Cardamom-5,

Chilly Powder,

Coriander Powder,

Grind the above given ingredients.

 

Procedure to make Mutton Briyani:

 

1. In a pan, add oil, ghee, cinnamon, cloves, cardamom, ginger, garlic paste and saute till the raw smell subsides. Then add mutton and salt and stir for a while. After 5 minutes, aadd ground masala, onion, green chilies and fry well.

2. Then add tomato, mint, coriander and stir for a while and then add curd and water and let to boil. When the masala is 3/4 cooked, add water, salt, kesari powder, lemon juice and stir for a while and then add rice and stir well.

3.After 5 minutes, stir frequently and cover the vessel. Then pour water in a vessel and place this vessel on top of the boiling vessel. Allow medium flame for 1/4 hour. Mutton briyani is ready to taste.

by anusiya   on 14 Jun 2012  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
25-Nov-2017 05:33:55 சுறா said : Report Abuse
வெரி நைஸ், நைஸ் டெலிசியஸ்
 
14-May-2016 11:49:07 anandaraj said : Report Abuse
Mutton brigand super
 
28-Feb-2016 02:10:07 Senthil Kumar said : Report Abuse
செம சூப்பர் mattan பிரியாணி ரெடி..
 
07-Mar-2015 09:19:45 prakasharavindhan said : Report Abuse
good...................
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.