LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தெய்வப் பாடல்கள் - தோத்திர பாடல்கள் பகுதி - 5

 

34. மஹாசக்தி வாழ்த்து
விண்டு ரைக்க அறிய அரியதாய்
விவிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அததனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!நினைக் காளியென் றேத்துவேன். 1
நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;
கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே. 2
பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திளெனச் செல்லுவை,
மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
வெல்க காளி யென தம்மை வெல்கவே. 3
வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளிருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை. 4
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!
போற்றி!போற்றி!நினதருள் போற்றியே! 5
சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப் பல்கினை;
தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீக்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை. 6
 
35. ஊழிக் கூத்து
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  1
ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய,அடு தீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  2
பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்"ஓஹோ ஹோ"வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  3
சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  4
காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  5
 
36. காளிக்குச் சமர்ப்பணம்
இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;
வந்த னம்;அடி பேரருள் அன்னாய்!
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்த னைதெளிந் தேனினி யுன்தன்
திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;
வந்தி ருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி!நீ.
 
37. காளி தருவாள் 
எண்ணி லாத பொருட்குவை தானும்,
ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம்
வெம்மை யும்பெருந் திணமையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளி;
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். 1
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,
நான்வி ரும்பின காளி தருவாள்.  2
38. மஹா காளியின் புகழ்
காவடிச் சிந்து
ராகம்-ஆனந்த பைரவி    தாளம்-ஆதி
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு-ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு-தழல்
தாலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு-மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக
வேண்டும் நித்த மென்தனேழை யுள்ளம் 1
அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை-அவள்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்தன்
அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலா மவள்புரியம் மாயை-அவள்
ஏதுமற்ற மெய்ப பொருளின் சாயை-எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்த
எற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை. 2
ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும்-ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும்-அவை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்த
நெறியுமெய்து வர்நினைத்தபோது-அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது-என்றும்
நேர்மைவேதம் சொல்லும்வழி யீது. 3
 
39. வெற்றி
எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,
பாரில் வெற்ற எனக்குறு மாறே.  1
எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்
காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே. 2
40. முத்துமாரி
உலகத்து நாயகியே!-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!  1
துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!  2
41. தேச முத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய் 
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்
எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்
ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொரிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்
நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
42. கோமதி மஹிமை
தாருக வனத்தினிலே-சிவன்
சரணநன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார்-பர
சிவன்பு கழமுதினை அருந்திடுவார்;
பேருயர் முனிவர் முன்னே-கல்விப்
பெருங்கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞனத்தினால்-உயர்
சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். 1
வாழிய முனிவர்களே!-புகழ்
வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
உழியைச் சமைத்த பிரான்;-இந்த
உலக மெலாமுருக் கொண்டபிரான்,
ஏழிரு புவன்ததிலும்-என்றும்
இயல்பெரும் உயிகளுக் குயிராவான,
ஆழுநல் லறிவாவான்,-ஒளி
யறிவிக் கடந்தமெய்ப் பொருளாவான். 2
தேவர்க் கெலாந்தேவன்;-உயர்
சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும்-அந்தக்
கண்ணனுந் தானுமிங் கோருருவாய்,
ஆவசெல டருந்தவங்கள்-பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள்புரிந்தான்,-அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன். 3
கேளீர்,முனிவர்ளே!-இந்தக்
கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால்-சதுர்
வேதங்க ளாயிரமுறை படித்தால்,
மூளுநற் புண்ணியந்தான்-வந்து
மொய்த்திடும்;சிவனியல் விளங்கிநிற்கும்;
நாளுநற் செல்வங்கள்-பல
நணுகிடும்;சரதமெய் வாழ்வுண்டாம். 4
இக்கதை உரைத்திடுவேன்,-உளம்
இன்புறக் கேட்பீர்,முனிவர்களே!
நக்க பிரினருளால்-இங்கு
நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்க்ள்-வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவர றிவார்?-புவி
எத்தனை யுளதென்ப தியார றிவார்? 5
நக்க பிரான றிவான்;-மற்று
நானறி யேன்பிற நரரறியார்;
தொக்க பேரண்டங்கள்-கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள்;ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கடலதனுக்கே-எங்கும்
அக்கரை யிக்கரை யொன்றில்லையாம். 6
இக்கட லதனக்தே-அங்கங்
கிடையிடைத் தான்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்-திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடம்
மிக்கதொர் வியப்புடைத்தாம்-இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி,கண்டீர்
மெய்ககலை முனிவர்களே!-இதன்
மெய்ப்பொருள் பரசிவன்சக்தி,கண்டீர்!
எல்லை யுண்டோ இலையோ?-இங்கு
யாவர் கண்டார்திசை வெளியினக்கே?
சொல்லுமொர் வரம்பிட்டால்-அதை
***(இது முற்றுப் பெறவில்லை)
43. சாகா வரம்
பல்லவி
சாகாவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா!-சரோஜ பாதா!
சரணங்கள்
ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை தமும் ஒத்து நிறைந்தாய்
ஏகாமிர்த மாகிய நித்ள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா?              (சாகா)
வாகார்தோள் வீரா, தீரா,
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையுன் மென்தோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா!  (சாகா)
நித்யா,நிர்மலா,ராமா
நிஷ்க ளங்கா, சர்வா தாரா,
சத்யா, சநாதநா,ராமா,
சரணம்,சரணம்,சரண முதாரா!    (சாகா)
44. கோவிந்தன் பாட்டு
கண்ணி ரண்டும் இமையாமல் செந்நிறத்து
மெல்லிதழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளைஹயம் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும் மிப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே.  1
எளியனேன் யானெனலை எப்போது
போக்டுவாய்,இறைவ னே!இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரம்பில் வான
செளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா!நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ? 2
என்கண்ணை மறதுனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக்கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு
எவனகண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து,நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா!
என்க்கமுதம் புகட்டு வாயே.  3

34. மஹாசக்தி வாழ்த்து
விண்டு ரைக்க அறிய அரியதாய்விவிந்த வான வெளியென நின்றனை;அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;மண் டலத்தை அணுவணு வாக்கினால்,வருவ தெத்தனை அததனை யோசனைகொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,கோலமே!நினைக் காளியென் றேத்துவேன். 1
நாடு காக்கும் அரசன் தனையந்தநாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்கோலம் ஏழை குறித்திட லாகுமோ?நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே. 2
பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;கரிய மேகத் திளெனச் செல்லுவை,மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,வெல்க காளி யென தம்மை வெல்கவே. 3
வாயு வாகி வெளியை அளந்தனை,வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,தேயு வாகி ஒளிருள் செய்குவை,செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;பாயு மாயிரஞ் சக்திக ளாகியேபாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பனதம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை. 4
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;தலத்தின் மீது மலையும் நதிகளும்,சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!போற்றி!போற்றி!நினதருள் போற்றியே! 5
சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்செய்த கர்மப் பயனெனப் பல்கினை;தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்சுத்த மோனப் பகுதியும் வெண்பனிசூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்றுஒத்த நீக்கடல் போலப் பலவகைஉள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை. 6 35. ஊழிக் கூத்து
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்வெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-பாட்டின்அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை.  1
ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கேமுந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடேமுடியா நடனம் புரிவாய,அடு தீ சொரிவாய்!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை.  2
பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கேஊழாம் பேய்தான்"ஓஹோ ஹோ"வென் றலைய;-வெறித்துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை.  3
சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கேஎத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானேஎரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை.  4
காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கேகடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை.  5 36. காளிக்குச் சமர்ப்பணம்
இந்த மெய்யும் கரணமும் பொறியும்இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;வந்த னம்;அடி பேரருள் அன்னாய்!வைர வீ! திறற் சாமுண்டி! காளி!சிந்த னைதெளிந் தேனினி யுன்தன்திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;வந்தி ருந்து பலபய னாகும்வகைதெ ரிந்துகொள் வாழி யடி!நீ. 37. காளி தருவாள் 
எண்ணி லாத பொருட்குவை தானும்,ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கேவிண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம்வெம்மை யும்பெருந் திணமையும் அறிவும்,தண்ணி லாவின் அமைதியும் அருளும்தருவள் இன்றென தன்னை யென்காளி;மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். 1
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,வானம் மூன்று மழைதரச் செய்வேன்மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மைவண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,நான்வி ரும்பின காளி தருவாள்.  2
38. மஹா காளியின் புகழ்
காவடிச் சிந்து
ராகம்-ஆனந்த பைரவி    தாளம்-ஆதி
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீதுகாளிசக்தி யென்றபெயர் கொண்டு-ரீங்காரமிட் டுலவுமொரு வண்டு-தழல்தாலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்கால்களா றுடையதெனக் கண்டு-மறைகாணுமுனி வோருரைத்தார் பண்டு.மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகிவிணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்தவிந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழவேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்தவீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆகவேண்டும் நித்த மென்தனேழை யுள்ளம் 1
அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதைஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை-அவள்ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்தன்அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள்ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்இஃதெலா மவள்புரியம் மாயை-அவள்ஏதுமற்ற மெய்ப பொருளின் சாயை-எனில்எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்தஎற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை. 2
ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்அங்குமிங்கு மெங்குமுள வாகும்-ஒன்றேயாகினா லுலகனைத்தும் சாகும்-அவையன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லைஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்தஅறிவுதான் பரமஞான மாகும்.நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்தநெறியுமெய்து வர்நினைத்தபோது-அந்தநித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபதநீழலடைந் தார்க்கில்லையோர் தீது-என்றும்நேர்மைவேதம் சொல்லும்வழி யீது. 3 39. வெற்றி
எடுத்த காரியம் யாவினும் வெற்றி,எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கேவிடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,வேண்டி னேனுக் கருளினள் காளி;தடுத்து நிற்பது தெய்வத மேனும்சாகு மானுட மாயினும் அஃதைப்படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,பாரில் வெற்ற எனக்குறு மாறே.  1
எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;மண்ணும் காற்றும் புனலும் அனலும்வானும் வந்து வணங்கிநில் லாவோ?விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?வெல்க காளி பதங்களென் பார்க்கே. 2
40. முத்துமாரி
உலகத்து நாயகியே!-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!பய னொன்று மில்லையடி-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!  1
துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!  2
41. தேச முத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய் 
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்
எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்
ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொரிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்
நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
42. கோமதி மஹிமை
தாருக வனத்தினிலே-சிவன்சரணநன் மலரிடை யுளம்பதித்துச்சீருறத் தவம் புரிவார்-பரசிவன்பு கழமுதினை அருந்திடுவார்;பேருயர் முனிவர் முன்னே-கல்விப்பெருங்கடல் பருகிய சூதனென்பான்தேருமெய்ஞ் ஞனத்தினால்-உயர்சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். 1
வாழிய முனிவர்களே!-புகழ்வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே,உழியைச் சமைத்த பிரான்;-இந்தஉலக மெலாமுருக் கொண்டபிரான்,ஏழிரு புவன்ததிலும்-என்றும்இயல்பெரும் உயிகளுக் குயிராவான,ஆழுநல் லறிவாவான்,-ஒளியறிவிக் கடந்தமெய்ப் பொருளாவான். 2
தேவர்க் கெலாந்தேவன்;-உயர்சிவபெரு மான்பண்டொர் காலத்திலேகாவலி னுலகளிக்கும்-அந்தக்கண்ணனுந் தானுமிங் கோருருவாய்,ஆவசெல டருந்தவங்கள்-பலஆற்றிய நாகர்கள் இருவர் முன்னேமேவிநின் றருள்புரிந்தான்,-அந்தவியப்புறு சரிதையை விளம்புகின்றேன். 3
கேளீர்,முனிவர்ளே!-இந்தக்கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கேவேள்விகள் கோடி செய்தால்-சதுர்வேதங்க ளாயிரமுறை படித்தால்,மூளுநற் புண்ணியந்தான்-வந்துமொய்த்திடும்;சிவனியல் விளங்கிநிற்கும்;நாளுநற் செல்வங்கள்-பலநணுகிடும்;சரதமெய் வாழ்வுண்டாம். 4
இக்கதை உரைத்திடுவேன்,-உளம்இன்புறக் கேட்பீர்,முனிவர்களே!நக்க பிரினருளால்-இங்குநடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்!தொக்கன அண்டங்க்ள்-வளர்தொகைபல கோடிபல் கோடிகளாம்!இக்கணக் கெவர றிவார்?-புவிஎத்தனை யுளதென்ப தியார றிவார்? 5
நக்க பிரான றிவான்;-மற்றுநானறி யேன்பிற நரரறியார்;தொக்க பேரண்டங்கள்-கொண்டதொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்றதக்கபல் சாத்திரங்கள்;ஒளிதருகின்ற வானமொர் கடல்போலாம்;அக்கடலதனுக்கே-எங்கும்அக்கரை யிக்கரை யொன்றில்லையாம். 6
இக்கட லதனக்தே-அங்கங்கிடையிடைத் தான்றும்புன் குமிழிகள்போல்தொக்கன உலகங்கள்-திசைத்தூவெளி யதனிடை விரைந்தோடம்மிக்கதொர் வியப்புடைத்தாம்-இந்தவியன்பெரு வையத்தின் காட்சி,கண்டீர்மெய்ககலை முனிவர்களே!-இதன்மெய்ப்பொருள் பரசிவன்சக்தி,கண்டீர்!
எல்லை யுண்டோ இலையோ?-இங்குயாவர் கண்டார்திசை வெளியினக்கே?சொல்லுமொர் வரம்பிட்டால்-அதை***(இது முற்றுப் பெறவில்லை)
43. சாகா வரம்
பல்லவிசாகாவர மருள்வாய், ராமா!சதுர்மறை நாதா!-சரோஜ பாதா!
சரணங்கள்ஆகாசந் தீகால் நீர்மண்அத்தனை தமும் ஒத்து நிறைந்தாய்ஏகாமிர்த மாகிய நித்ள்இணைசர ணென்றால் இதுமுடி யாதா?              (சாகா)
வாகார்தோள் வீரா, தீரா,மன்மத ரூபா, வானவர் பூபா,பாகார்மொழி சீதையுன் மென்தோள்பழகிய மார்பா! பதமலர் சார்பா!  (சாகா)
நித்யா,நிர்மலா,ராமாநிஷ்க ளங்கா, சர்வா தாரா,சத்யா, சநாதநா,ராமா,சரணம்,சரணம்,சரண முதாரா!    (சாகா)
44. கோவிந்தன் பாட்டு
கண்ணி ரண்டும் இமையாமல் செந்நிறத்துமெல்லிதழ்ப்பூங் கமலத் தெய்வப்பெண்ணிரண்டு விழிகளைஹயம் நோக்கிடுவாய்கோவிந்தா! பேணி னோர்க்குநண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்சராசரத்து நாதா! நாளும்எண்ணிரண்டு கோடியினும் மிப்பலவாம்வீண்கவலை எளிய னேற்கே.  1
எளியனேன் யானெனலை எப்போதுபோக்டுவாய்,இறைவ னே!இவ்வளியிலே பறவையிலே மரத்தினிலேமுகிலினிலே வரம்பில் வானசெளியிலே கடலிடையே மண்ணகத்தேவீதியிலே வீட்டி லெல்லாம்களியிலே, கோவிந்தா!நினைக்கண்டுநின்னொடுநான் கலப்ப தென்றோ? 2
என்கண்ணை மறதுனிரு கண்களையேஎன்னகத்தில் இசைத்துக்கொண்டுநின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவேநான்கண்டு நிறைவு கொண்டுஎவனகண்மை மறதியுடன் சோம்பர்முதற்பாவமெலாம் மடிந்து,நெஞ்சிற்புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா!என்க்கமுதம் புகட்டு வாயே.  3

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural 3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.