LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தெய்வப் பாடல்கள் - ஞானப் பாடல்கள் பகுதி - 2

 

14. சித்தாந்தச் சாமி கோயில்
 
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீப வொளி யுண்டாம்;-பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச் சுடராம்;-பெண்ணே! 1
உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே! 2
தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே! 3
பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர்சுடராம்;-பெண்ணே! 4
15. பக்தி்
 
ராகம்-பிலஹரி
பல்லவி
பக்தியினாலே-தெய்வ-பக்தியினாலே
சரணங்கள்
1. பக்தியினாலே-இந்தப்
பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்
தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தி)
2. காமப் பிசாசைக் -குதிக்
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்
நாம மில்லாத-உண்மை
நாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தி)
3. ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டட
பாச மறுப்போம்,-இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தி)
4. சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்
பார்வைகள் தோன்றும்,-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தி)
5. கல்வி வளரும்,-பல
காரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,
சொல்லுவதெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தி)
6. சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும்.  (பக்தி)
7. சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்
கந்த மலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தை யறிந்தே-அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தி)
16.அம்மாக்கண்ணு பாட்டு
 
பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயோலே.  (பூட்டைத்)
17. வண்டிக்காரன் பாட்டு
 
அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை
காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?-எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!  1
நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே?-எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!.  2
18. கடமை அறிவோம்
 
கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
19. அன்பு செய்தல்
 
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 1
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!  2
20. சென்றது மீளாது!
 
சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
21. மனத்திற்குக் கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
22. மனப் பெண்
 
மனமெனும் பெண்ணே!வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்;
அடிக்கடி மதுவினை மணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்
அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா மென்னை
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பபரம் பொருளைக்
காணவே வருந்துவாய் காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்.
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என் விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்தனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.
23. பகைவனுக்கருள்வாய்
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.  (பகைவ)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!  (பகைவ)
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே!   (பகைவ)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)
தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!  (பகைவ)
24. தெளிவு
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?  1
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?  2
சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?  3
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தே னுரைத் தனனே;-மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?  4
ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க
கச்ச முண்டோடா-மனமே?
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!  5
25. கற்பனையூர்
கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்கு
கந்தர்வா விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்கு
சூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை. 1
திருமனை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலார்கடலில்-நாம்
மீளவும் நம்மூர் திரும்புமுன்னே.  2
அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3
எக்கால மும்பெரு மகிழ்ச்சி-யங்கே
எவ்வகைக் கவலையும் போரு மில்லை,
பக்குவத் தயிலை நீர்குடிபோம்-அங்குப்
பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4
இன்னமு திற்கது நேராகும்-நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரதனிடை வாழ்ந்திடுவோம்-நம்னை
நலித்திடும்பே யங்கு வாராதே.  5
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்கு
கோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்
அழகிய பொமுடி யரசிகளாம்-அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6
செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்கு
சிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்.
சந்தோஷத்துடன் செங்கலையும்-அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7
கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8
குழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம்-அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே!
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.  9

14. சித்தாந்தச் சாமி கோயில் சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்தீப வொளி யுண்டாம்;-பெண்ணேமுத்தாந்த வீதி முழுதையுங் காட்டிடமூண்ட திருச் சுடராம்;-பெண்ணே! 1
உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே! 2
தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பதுதோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணேமூன்று வகைப்படும் கால நன்றென்பதைமுன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே! 3
பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணே!கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்காண வொளிர்சுடராம்;-பெண்ணே! 4
15. பக்தி் ராகம்-பிலஹரி
பல்லவிபக்தியினாலே-தெய்வ-பக்தியினாலே
சரணங்கள்1. பக்தியினாலே-இந்தப்பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!சித்தந் தெளியும்,-இங்குசெய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,வித்தைகள் சேரும்,-நல்லவீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தி)
2. காமப் பிசாசைக் -குதிக்கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்தாமசப் பேயைக்-கண்டுதாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்தீமையை எண்ணி-அஞ்சுந்தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்நாம மில்லாத-உண்மைநாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தி)
3. ஆசையைக் கொல்வோம்,-புலைஅச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டடபாச மறுப்போம்,-இங்குபார்வதி சக்தி விளங்குதல் கண்டதைமோசஞ் செய்யாமல்-உண்மைமுற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்ஈசனைப் போற்றி-இன்பம்யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தி)
4. சோர்வுகள் போகும்,-பொய்ச்சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்பார்வைகள் தோன்றும்,-மிடிப்பாம்பு கடித்த விஷமகன் றேநல்லசேர்வைகள் சேரும்,-பலசெல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தி)
5. கல்வி வளரும்,-பலகாரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,அல்ல லொழியும்-நல்லஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,சொல்லுவதெல்லாம்-மறைச்சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்வல்லமை தோன்றும்,-தெய்வவாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தி)
6. சோம்ப லழியும்-உடல்சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்கூம்புத லின்றி-நல்லகோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்வீம்புகள் போகும்-நல்லமேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்பாம்பு மடியும்-மெய்ப்பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும்.  (பக்தி)
7. சந்ததி வாழும்,-வெறுஞ்சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்இந்தப் புவிக்கே-இங்கொர்ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்கந்த மலர்த்தாள்-துணை;காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்சிந்தை யறிந்தே-அருள்செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தி)
16.அம்மாக்கண்ணு பாட்டு பூட்டைத் திறப்பது கையாலே-நல்லமனந்திறப்பது மதியாலேபாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்பவீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஏட்டைத் துடைப்பது கையாலே மனவீட்டைத் துடைப்பது மெய்யாலே,வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்கோட்டை பிடிப்பது சொல்லாலே.
காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்காயத்தைக் காப்பது செய்கையாலே,சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்துணி வுறுவது தாயோலே.  (பூட்டைத்)
17. வண்டிக்காரன் பாட்டு அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை
காட்டு வழிதனிலே-அண்ணே!கள்ளர் பயமிருந்தால்?-எங்கள்வீட்டுக் குலதெய்வம்-தம்பிவீரம்மை காக்குமடா!  1
நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்நெருக்கிக் கேட்கையிலே?-எங்கள்கறுத்த மாரியின் பேர்-சொன்னால்காலனும் அஞ்சுமடா!.  2
18. கடமை அறிவோம் கடமை புரிவா ரின்புறுவார்என்னும் பண்டைக் கதை பேணோம்;கடமை யறியோம் தொழிலறி யோம்;கட்டென் பதனை வெட்டென் போம்;மடமை சிறுமை துன்பம் பொய்வருத்தம் நோவு மற்றிவை போல்கடமை நினைவுந் தொலைத் திங்குகளியுற் றென்றும் வாழ்குவமே.
19. அன்பு செய்தல் இந்தப் புவிதனில் வாழு மரங்களும்இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 1
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!  2
20. சென்றது மீளாது! சென்றதினி மீளாது,மூட ரே!நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்துகுமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
21. மனத்திற்குக் கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே!பேணா யென்சொல் இன் றுமுதல்நீயா ஒன்றும் நாடாதேநினது தலைவன் யானேகாண்;தாயாம் சக்தி தாளினிலும்தரும மெனயான் குறிப்பதிலும்ஓயா தேநின் றுழைத்திடு வாய்உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
22. மனப் பெண் மனமெனும் பெண்ணே!வாழி நீ கேளாய்!ஒன்றையே பற்றி யூச லாடுவாய்அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்விட்டுவி டென்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்புதியது காணிற் புலனழிந் திடுவாய்புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்;அடிக்கடி மதுவினை மணுகிடும் வண்டுபோல்பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!பிணத்தினை விரும்புங் காக்கையே போலஅழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலியஇழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்
அங்ஙனே,என்னிடத் தென்றும் மாறுத லில்லாஅன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்புலன்புலப் படுத்தும் புலனா மென்னை
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,தன்பின் னிற்குந் தனிப்பபரம் பொருளைக்காணவே வருந்துவாய் காணெனிற் காணாய்,சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்.
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமேவிரும்புவன்;நின்னை மேம்படுத் திடவேமுயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என் விழிப் பட்டசிவமெனும் பொருளைத் தினமும் போற்றிஉன்தனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.
23. பகைவனுக்கருள்வாய்
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!பூமியிற் கண்டோமே.பகைநடுவினில் அன்புரு வானநம்பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!பரமன் வாழ்கின்றான்.  (பகைவ)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்கொடி வளராதோ?-நன்னெஞ்சே!  (பகைவ)
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சேதெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே!   (பகைவ)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பதுவாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்றசாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டுநின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)
தின்ன வரும்புலி தன்னையும அன்பொடுசிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!  (பகைவ)
24. தெளிவு
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்ஏழைமை யுண்டோடா?-மனமே!பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்புத்தி மயக்க முண்டோ?  1
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்வேதனை யுண்டோடா?  2
சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!எத்தனை கோடி இடர்வந்து சூழினும்எண்ணஞ் சிறிது முண்டோ?  3
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்தே னுரைத் தனனே;-மனமே!பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்பூதல மஞ்சுவரோ?  4
ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்ககச்ச முண்டோடா-மனமே?தேன்மடை யிங்கு திறந்தது கண்டுதேக்கித் திரிவமடா!  5
25. கற்பனையூர்
கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குகந்தர்வா விளையாடு வராம்சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குசூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை. 1
திருமனை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இதுஸ்பானியக் கடலில் யாத்திரை போம்வெருவுற மாய்வார் பலார்கடலில்-நாம்மீளவும் நம்மூர் திரும்புமுன்னே.  2
அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மைஅன்பொடு கண்டுரை செய்திடுவான்;மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3
எக்கால மும்பெரு மகிழ்ச்சி-யங்கேஎவ்வகைக் கவலையும் போரு மில்லை,பக்குவத் தயிலை நீர்குடிபோம்-அங்குப்பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4
இன்னமு திற்கது நேராகும்-நம்மையோவான் விடுவிக்க வருமளவும்,நன்னக ரதனிடை வாழ்ந்திடுவோம்-நம்னைநலித்திடும்பே யங்கு வாராதே.  5
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குகோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்அழகிய பொமுடி யரசிகளாம்-அன்றிஅரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6
செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குசிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்.சந்தோஷத்துடன் செங்கலையும்-அட்டைத்தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7
கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழிகாண்ப திலாவகை செய்திடுவோம்-ஓபிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8
குழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம்-அந்தக்கோலநன் னாட்டிடைக் காண்பீரே!இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.  9

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.