LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்

 

பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


அந்தத் தங்கப் படிமம் பாகிஸ்தானுக்கு ஒரு பொருளாதார உயிர் நாடி மட்டுமல்ல, அதற்குப் பக்கத்தில் உள்ள நாட்டுடன் எதிர்பாராத இணைப்பையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கண்டுபிடிப்பு, புதிய வளத்தை வெட்டி எடுப்பதற்கான பெரிய திட்டங்களில் ஈடுபட தூண்டுகோலாக அமைந்துள்ளது. இது நெருக்கடியில் உள்ள அந்நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஊக்கத்தையும் நம்பிக்கை உணர்வையும் கொடுத்துள்ளது.


பாகிஸ்தான் அரசின் ஆலோசனை நிறுவனமான ‘தேசியப் பொறியியல் சேவைகள் பாகிஸ்தான்’ (நெஸ்பாக்), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை ஆகியவை இணைந்து தங்கத்தை வெட்டி எடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, சிந்து நதி பகுதியில் 9 தங்கத் தொகுதிகளுக்கான சுரங்க உரிமைகளை ஏலம் விடுவதற்கான ஆவணங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது பாகிஸ்தானின் சுரங்கத் துறைக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தின் தொடக்கமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அங்குக் காணப்படும் தங்கப் படிமங்கள் இந்தியாவின் இமயமலைப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். ஆற்றின் நீரோட்டம் தங்கத் துகள்களைக் கீழ் நோக்கிக் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அது அங்குப் படிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காலப்போக்கில் ஆற்றின் ஓட்டம் இந்தத் தங்கக் கட்டிகளை வட்டமாகவும் மென்மையாகவும் மாற்றி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவற்றைப் பிரித்து எடுப்பது எளிது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

by hemavathi   on 08 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம்
நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம் நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம்
இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் -  கனடாவின்  புதிய பிரதமர்  மார்க் கார்னி இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் - கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்   மார்ச் 19  அல்லது  20 -ல்  பூமிக்குத் திரும்புகிறார்கள்  - நாசா அறிவிப்பு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19 அல்லது 20 -ல் பூமிக்குத் திரும்புகிறார்கள் - நாசா அறிவிப்பு
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் - டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் - டொனால்ட் ட்ரம்ப்
கனடா மெக்சிகோ மீதான 25% இறக்குமதி வரி அமலுக்கு வந்தது- பதிலடி தருவோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை! கனடா மெக்சிகோ மீதான 25% இறக்குமதி வரி அமலுக்கு வந்தது- பதிலடி தருவோம் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!
வெளிநாட்டுப் பணக்காரர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க தங்க அட்டை’ திட்டம் அறிமுகம் வெளிநாட்டுப் பணக்காரர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க தங்க அட்டை’ திட்டம் அறிமுகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.