LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

49 ஓ ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !!

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு காமெடி நடிகர் கவுண்டமணி நடித்து கொண்டிருக்கும் படம் 49 ஓ. 


இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கவுண்டமணி தான் ஹீரோ. அரியலூர் பகுதிகளில் படபிடிப்பு நடைபெற்றுவரும் இந்த படம் குறித்து கவுண்டமணி அளித்துள்ள பேட்டியில், கடந்த 2010ல், நான் நடிச்ச ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்ள படங்கள் ரிலீசாச்சு இப்போ 4 வருஷத்துக்கு பிறகு நடிக்க வந்திருக்கேன். 


நான் என்னமோ ராமர் வனவாசம் போன மாதிரி 14 வருஷம் கழிச்சு வந்த மாதிரி பேசுறாங்க. நடிகன்னா சின்ன கேப் விடுவான். அப்புறம் மளமளன்னு நடிப்பான். சினிமாவுல இதல்லாம் சாதாரணமப்பா. 


49 ஓ டைரக்டர் ஆரோக்கியதாஸ் என்னை விடாம துரத்தினாரு. உங்கள மனசுல வச்சு எழுதிய கதைன்னு சொன்னாரு, அவரோட ஆர்வமும், தன்னம்பிக்கையும் பிடிச்சுது, சரிப்பா நடிக்கிறேன்னு வந்துட்டேன். படத்துல நான்தான் ஹீரோ. 


நம்ம நாட்டுல விவசாயம் செத்துக்கிட்டு இருக்கு. அட நானும் விவசாயிதானுங்க. அதான் விவசாயியாக நடிக்க ஒத்துக்கிட்டேன். 49ஓ ன்னா அரசியல் படமும் இல்லை. அரசியல்வாதிகளை தாக்கவும் இல்ல. விவசாயம் தான் கதை. நடவு நடப்போனா வெயில் அடிச்சு கெடுக்குது. கதிர் அறுக்கப்போனா மழை பெஞ்சு கெடுக்குது. ஆனாலும் விவசாயி நம்பிக்கையோட இருக்கான். அந்த நம்பிக்கைதான் நமக்கு சோறு போடுது. அவனை கொஞ்சம் மதிங்கப்பான்னு சொல்றதுக்குதான் இந்த படம் என கலகலப்பாக பேசினார் கவுண்டமணி.  

by Swathi   on 14 Mar 2014  0 Comments
Tags: Goundamani   49 O   49 O Movie   கவுண்டமணி   49 ஓ   அரசியல்   விவசாயம்  
 தொடர்புடையவை-Related Articles
காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்... காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...
சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா
49 ஓ திரை விமர்சனம் !! 49 ஓ திரை விமர்சனம் !!
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !! ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !!
கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !! கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !!
அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன் அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.