|
|||||
நவீன வசதிகளுடன் அரசு விரைவுப் பேருந்துகள் - ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வரும்! |
|||||
படக்கருவி, அவசரக்கால பொத்தான் (எஸ்ஓஎஸ்), நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவுப் பேருந்துகள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
போக்குவரத்துக் கழகங்களுக்கான புதிய பேருந்துகள் கொள்முதலில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் 50 விரைவுப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன.
விரைவுப் பேருந்துகளில் நாளுக்கு நாள் தனியார் பேருந்துகளுக்கு இணையான நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. அதன்படி, பயன்பாட்டுக்கு வரவிருக்கும் விரைவுப் பேருந்துகளில் உள்ள தானியங்கி தீயணைப்பு அமைப்பு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பேருந்துக்குள் சிறு புகை தென்பட்டாலும் அலாரம் அடித்துவிடும். அது தீயாக இருக்கும்பட்சத்தில் ஓட்டுநர் பொத்தானை அழுத்தியவுடன் ரசாயனம் மூலம் தீயணைக்கப்படும்.
அதிகமாக தீ பரவினால் ஓட்டுநரை எதிர்பாராமல் தீயணைக்கும் அமைப்பு இயங்கிவிடும். முன்பு இந்த அமைப்பு எந்திரத்தில் மட்டும் இருந்த நிலையில் தற்போது பயணிகள் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. வண்டியை பின்னோக்கி இயக்க ஏதுவாக படக்கருவி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து இருக்கைக்கு அருகிலும் அவசரக்கால பொத்தான் (எஸ்ஓஎஸ்), ரீடிங் விளக்கு போன்றவை இடம்பெற்றுள்ளன.
"29 ஏசி பேருந்துகளும், 21 குளிர்சாதன வசதியில்லா பேருந்துகளும் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்" என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
|||||
by hemavathi on 21 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|