LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு அவசர சட்டம் !

சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகளை பொது அமைப்பு என்று வர்ணித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என ஜூன் 3 ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தாங்கள் அரசின் நிதி உதவியுடன் செயல்படவில்லை என்றும், தாங்கள் பொது அமைப்புகள் அல்ல என்றும், அதனால் தங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது என்றும் எதிர்ப்புகள் வலுபெற்றன.இந்நிலையில், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும் வகையில் இருப்பதால், அந்த உத்தரவை செல்லாததாக ஆக்குவதற்கு அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அந்த அவசர சட்டத்தில், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், ‘பொது அமைப்பு’ என்ற வார்த்தைக்கான விளக்கத்தை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.இந்த அவசர சட்டம் தொடர்பான வரைவு நகலை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்துள்ளது. அதை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 28 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.