|
||||||||
பெருங்கவிக்கோ வா மு. சேதுராமன் மறைந்தார்.. எமது அஞ்சலி.. |
||||||||
![]() முதுபெரும் தமிழறிஞர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் 4-07-25 வெள்ளிக்கிழமை இரவு 8.15 க்கு இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சியான செய்தியை நம்பமுடியவில்லை. பன்னாட்டு தமிழுறவு மன்றம் அமைப்பு கட்டி, தமிழ்ப்பணி இதழ் நடத்தி, பல நூல்களை எழுதி, பல பரப்புரை பயணங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மேற்கொண்டு தொடர்ந்து ஆழமாகத் தமிழ் பரப்புரையாளராகச் செயல்பட்டு வந்தவர். தமிழ் சார்ந்து தொடர்ந்து சிந்தித்து, செயல்பட்டு வந்த தமிழ் உணர்வு மிக்க முன்னோடி . உலகின் பல நாடுகளுக்குப் பயணித்து தமிழ்ச்சங்கங்களைச் சந்தித்து, அந்தந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் நிலையை அறிந்து ஆவணப்படுத்தி வந்தவர்
தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்த உணர்வாளர்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த ஆளுமை.
அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் - உறவினர்கள் - தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்கள் - தமிழ்த் தொண்டர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொலைப்பேசியை மறவாமல் வைத்திருப்பார். நினைவாற்றல் மிகுந்தவர். திடீரென அழைப்பு வரும்... நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பார். தமிழ்ப்பணிகளைப் பாராட்டுவார். குடும்பத்தைப் பற்றி விரிவாகக் கேட்டறிவார். கடைசியாக சென்னை புத்தகத்தைத் திருவிழாவில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் பேசி அவரது உலகத் தமிழ்ப் பயண அனுபவங்களை ஆவணப்படுத்தவேண்டும் என்ற சிந்தனை இருந்தது. பேரன்பு கொண்ட பெருமகனார் மறைந்த செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது.
முதுபெரும் தமிழரின் இழப்பு தமிழ்கூறு நல்லுலகுக்கு பேரிழப்பு! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி |
||||||||
by hemavathi on 04 Jul 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|