|
||||||||
கீரை சாதம் (spinach rice) |
||||||||
தேவையானவை : கீரை - 1 கட்டு பச்சை மிளகாய் - 1 சின்ன வெங்காயம் - 3 தக்காளி - 1/2 உப்பு - தேவைகேற்ப தாளிக்க தேவையானவை : கடுகு பெருங்காயம் - சிறிது உளுந்து பூண்டு - 5 பற்கள் மிளகு - 5 காய்ந்த மிளகாய் - 2 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து .இதனுடன் கீரை சேர்த்து வதக்கவேண்டும்.வாணலியை மூட வேண்டாம்.சிறிது நேரத்திலேயே வதங்கி விடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும். 2.மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்.தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.இந்த கலவையுடன் தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.இது சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும். 3.கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பெருங்காயம் தாளித்து கிரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடு.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும். |
||||||||
Spinach Rice | ||||||||
Ingredients for Spinach Rice:
Spinach-1 Bunch Green Chilly-1 Small onion-3 Tomato-1/2 Salt-as Needed
Ingredients for Tempering:
Mustard Asafoetida-Little Black Gram Garlic-5 Flakes Pepper-5 Dry Chilly-2 Sesame Oil-2 Tsp Cumin-1/4 Tsp
Procedure to make Spinach Rice:
1. Wash the spinach and chop them very finely. Heat oil in a pan, add onion, green chilly, tomato, spinach and fry well. Then allow to cool and grind them. 2. Heat oil in a pan, add seasoning ingredients and let to splutter and then add into ground paste and grind them coarsely. Add salt and place this ground paste in a cup. This paste is nice combination for rice. 3. To make spinach rice, boil 2 cup of rice and allow to cool. In a pan, heat sesame oil, asafoetida and let to splutter and then add ground paste. Remove from flame and add into boiled rice and stir well.
|
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|